சிறைவாசிகள் விடுதலைக்கான தனி சட்டம் இல்லை. அந்த சட்டத்தை இயக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை என பேட்டி. சிறைவாசிகள் விடுதலைக்கான தனி சட்டம் இல்லை. அந்த சட்டத்தை இயக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை என பேட்டி.
சிறைவாசிகள் விடுதலைக்கான தனி சட்டம் இல்லை. அந்த சட்டத்தை இயக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை என பேட்டி.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலையானார்.
சிறையிலிருந்து விடுதலையானவுடன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த துயரம் எனக்கானது மட்டும்தான், ஆனால் என் மகிழ்ச்சி அனைவருக்குமானது என கூறினார். மேலும் பேசிய அவர், செங்கோடியின் தியாகத்தை நெஞ்சில் ஏந்துகிறேன். இதற்கு காரணமாக இருந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், விடுதலைக்கு திறவுகோல் தந்த ஜெயலலிதாவிற்கும், விடுதலையை உறுதி செய்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மேலும், மகிழ்ச்சியை விட இந்த தீர்ப்பு ஆறுதலைத் தருகிறது, விடுதலைக்கு குரல் கொடுத்து, போராடி, சிறைப்பட்ட தமிழ் திராவிட உணர்வாளர்களுக்கு நன்றி. உலக தமிழ் இனத்தின் அன்பை என்னால் என்றும் மறக்க முடியாது. அரசியல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இத்தனை ஆண்டுகளாக எனக்காக இருந்த குடும்பமும், தோழர்கள் உடனும்தான் எனக்கான அடுத்த பயணம். சமூகத்திற்கு பயன்படும் வகையில்தான் என் வாழ்வு இருக்கும் என தெரிவித்தார்.
தன்னுடைய நூல் எழுதும் பணிகள் தொடரும் என குறிபிட்ட அவர், எங்கள் விடுதலைக்காக உழைத்திட்ட உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவருக்கும் நன்றி. என் தாயாரின் 30 ஆண்டுகால துயரம், வலி முடிவுக்கு வந்துள்ளது என கூறினார்.
மேலும், இலங்கை அகதிகள் முகாமும் ஒரு சிறைக்கூடம் போல தான். இலங்கை அகதிகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மற்ற நபர்களை சட்ட ரீதியான நடவடிக்கை மூலமாக குடும்பத்துடன்/சொந்த ஊருக்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த 30 ஆண்டுகளில் எஞ்சியது அன்புள்ள உறவுகள் மட்டும்தான். இந்த 30 ஆண்டுகளில் நான் இழந்ததற்கு கணக்கே இல்லை. நீண்ட நாள் பரோலில் தொடர்வதற்கு உழைத்த எம்.பி கனிமொழி, அமைச்சர் நேருவுக்கு நன்றி என தெரிவித்தார். மேலும் உடல்நிலையில் கடந்த ஆண்டுகளில் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை இருந்தன. அவை கடந்த ஓராண்டு பரோல் காலத்தில் கொஞ்சம் தேறி உள்ளது. சொந்த ஊரில் விவசாயம், எழுத்து பணிகளை தொடர உள்ளேன் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்த வழக்கில் வெளிநாட்டு, உள்நாட்டு சக்திகள் தொடர்பில் உள்ளன. எங்களை வைத்து இந்த வழக்கை முடித்துக் கொண்டார்கள். தமிழரின் அறம்தான் எங்களை இன்று விடுதலை செய்துள்ளது சிறைவாசிகள் விடுதலைக்கான தனி சட்டம் இல்லை. அந்த சட்டத்தை இயக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. ஆயுள் தண்டனை சிறை வாசிகள் தொடர்பான சீர் திருத்தங்கள் தேவைப்படுகின்றன. விடுதலைக்கான விதிகள் தான் உள்ளன. அந்த விதிகளை கவர்னர் புறக்கணிக்கலாம். எனவே அதை சட்டமாக இயற்ற வேண்டும் என கூறினார்.