பட்டப்பகலில் துப்பாக்கியேந்திய போலீசார் கண்முன்னே சிவசேனா தலைவர் சுட்டுக்கொலை -
05 Nov,2022
போலீசார் பாதுகாப்புடன் இந்து மத வழிபாட்டு தல நிர்வாகத்திற்கு எதிராக சிவசேனா தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் சிவசேனா (தக்சலி) கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சுதீர் சுரி. காலிஸ்தான் பிரிவினைவாதிகள், ரவுடி கும்பல்களால் சுதீரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொண்டுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமிர்தசரசின் சுல்தான்வின் என்ற பகுதியில் இந்து மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தை சரியாக நிர்வகிக்கவில்லை என்று கூறு நிர்வாகத்திற்கு சுதீர் சுரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று இந்து
மத வழிபாட்டு தலம் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது சுதீர் சுரியை சுற்றியும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சுதீர் சுரியை நோக்கி ஒரு நபர் 5 முறை துப்பாக்கியால் சுட்டார். இதில், 2 குண்டுகள் சுதீரின் உடலில் பாய்ந்தன. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் துப்பாக்கியேந்திய போலீசார் கண் முன்னே நடைபெற்றது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுதீர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சில நிமிடங்களில் உயிரிழந்தார்.
முதல்-மந்திரி இரங்கல் துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சுதீரை
துப்பாக்கியால் சுட்ட சந்தீப் சிங் என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். சந்தீப் சிங் அப்பகுதியில் துணிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். போலீசார் கண்முன்னே சிவசேனா தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பஞ்சாப்பில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.