இத்தாலி சோனியா பிரதமர் ஆக கூடாது ரிஷி பிரதமர் ஆனதும் வாழ்த்து சொல்லும் மோடி- எந்த ஊர் நியாயம் ?
26 Oct,2022
இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியவேளை, கட்சியின் தலைவியாக இருந்தவர் சோனியா காந்தி. அவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என்பதனால் அவர் இந்தியாவை ஆழும் தகுதி அற்றவர் என்று கூறிய இதே பஜக. இன்று இந்தியரான ரிஷி சுண்ணக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இதற்கு மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் 85% விகிதம் வெள்ளை இனத்தவர்களே உள்ளார்கள். இதனால் பிரித்தானியா இந்தியரான ரிஷி சுண்ணக்கை, பிரதமராக ஏற்றுக் கொள்ளவில்லையா ? ஏற்றுக் கொண்டு உள்ளது. அது பிரித்தானியாவின் பெருமையக் காட்டுகிறது. ஆனால் இந்தியக் குடியுரிமை பெற்ற மற்றும் ராஜீவ் காந்தியின் மனைவியான சோனியாவை..
ஆட்சிப் பொறுப்பில் அமர இந்திய அரசியல்வாதிகள் அன்று விடவே இல்லை. இதனால் சோனியா மன்மோகன் சிங்கை பிரதமராக நியமித்தார். இந்தியாவுக்கு இல்லாத பெரும்தன்மை, பிரித்தானியாவுக்கு உள்ளது. இந்திய அரசியல்வாதிகளிடம் இல்லாத, நாகரீகம் பிரித்தானிய அரசியல்வாதிகளிடம் உள்ளது. எனவே பிரித்தானியா பற்றி பேச மோடிக்கோ இல்லை இந்திய அரசியல்வாதிகளுக்கோ எந்த ஒரு உரிமையும் இல்லை என்று தான் கூறவேண்டும். , அவரை தமிழர்கள் என்றும் ஆதரிக்கப் போவது இல்லை. அது வேறு விடையம். ஆனால் இந்த விடையத்தையும் நாம் நினைவில் கொள்ளவேண்டி உள்ளது.