காரில் சிலிண்டர் வெடித்த விவகாரம்: அனைத்து கோணங்களிலும் விசாரணை-
23 Oct,2022
இறந்த நபர் யார் ? எதற்காக வந்தார் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. புலன் விசாரணையில் ஏதேனும் கண்டறியப்பட்டதால் என்.ஐ.ஏ விசாரணைக்கு செல்லுமா என்பது குறித்து தெரியும். கோவையில் கோவில் அருகே கார் வெடித்த
ஒருவர் பலியான இடத்தை போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உக்கடத்தில் காரில் இருந்த 2 கேஸ் சிலிண்டர்கள் இருந்துள்ளது. இதில் ஒரு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்த நபர் யார் ? யாருடைய கார் என்பது குறித்து
அனைத்தகோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. காரில் இருந்த சிலிண்டர்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன. இறந்த நபர் யார் ? எதற்காக வந்தார் எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது. புலன் விசாரணையில் ஏதேனும் கண்டறியப்பட்டதால் என்.ஐ.ஏ விசாரணைக்கு செல்லுமா என்பது குறித்து தெரியும். 6 குழுக்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.