சீனாவில் வேகமாக பரவும் புதிய வகை ஒமைக்ரான்- குஜராத்தில் கண்டுபிடிப்பு
18 Oct,2022
இந்தியாவிலும் முதல்முறையாக பிஎப்.7 வகை ஒமைக்ரான் தொற்று குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்களில் தொற்று பரவல் குறிப்பிட்ட அளவில் இருக்கிறது. புதுடெல்லி: சீனாவில் தோன்றி உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரசுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டதால் பரவல் வேகம் வெகுவாக குறைந்து விட்டது. இருந்தாலும் கொரோனா வைரஸ் அடிக்கடி உருமாறி புதிய
வகைகளில் பரவி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஒமைக்ரான் வைரசின் புதிய திரிபான பிஎப்.7 சீனாவில் கண்டறியப்பட்டது. இந்த வகை தொற்று மிகவும் எளிதாக பரவும் தன்மை கொண்டது. இதற்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது தடுப்பூசி போடப்பட்டாலும் கூட பிஎப்.7 மாறுபாடு பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
சீனாவில் இம்மாதத்தின் முதல் வாரத்தில் கண்ட றியப்பட்ட இந்த வகை தொற்று பரவலால் மீண்டும் முழுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த வகை தொற்றுகள் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் இந்தியாவிலும் முதல்முறையாக பிஎப்.7 வகை ஒமைக்ரான் தொற்று குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள சில மாதிரிகளை குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தில் ஆய்வு செய்தபோது அதில் பிஎப்.7 வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.