தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு.. பழைய ரேட் vs புது கட்டணம்.. வித்தியாசம் எவ்வளவு? முழு விவரம் இதோ
10 Sep,2022
தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் யாருக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து பார்ப்போம். சென்னை ஓஎம்ஆரில் 2000 சதுர அடி கார்டன் வில்லா ப்ளாட்ஸ் @ 1.90 கோடி* தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த கட்டண உயர்வு 2026- 27 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுளளது.
பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்ட நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது.
எத்தனை யூனிட்டுகள் இந்த புதிய நடைமுறையின்படி எத்தனை யூனிட்டுகளுக்கு என்னென்ன விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்பதில் மாற்றமில்லை. வாடிக்கையாளர்கள் இந்த இலவச சலுகை வேண்டாம் என விருப்பப்பட்டால் மின்சார வாரியத்திற்கு
எழுதி கொடுக்கலாம். 200 யூனிட்டுகள் 200 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு மாதத்திற்கு ரூ 27.50 என இரண்டு மாதங்களுக்கு ரூ 55 கூடுதலாக வசூலிக்கப்படும். அதாவது 200 யூனிட் வரை பழைய கட்டணமாக 170 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 55 சேர்த்து ரூ 225 ஆக செலுத்த வேண்டும். 300 யூனிட்டுகள் அது போல் 300 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு இரண்டு மாதங்களுக்கு ரூ 145 கூடுதலாக வசூலிக்கப்படும். அதாவது 300 யூனிட் வரை பழைய கட்டணமாக 530 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 145 சேர்த்து ரூ 675 ஆக செலுத்த வேண்டும். 400 யூனிட்டுகள் 400 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 295 கூடுதலாக செலுத்த வேண்டும்.
அதாவது 400 யூனிட் வரை பழைய கட்டணமாக 830 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 295 ரூபாய் சேர்த்து ரூ 1125 ஆக செலுத்த வேண்டும். 500 யூனிட்டுகள் 500 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 595 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 500 யூனிட் வரை பழைய கட்டணமாக 1130 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 595 ரூபாய் சேர்த்து ரூ 1725 ஆக செலுத்த வேண்டும். 600 யூனிட்டுகள் 600 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 310 கூடுதலாக செலுத்த வேண்டும்.
அதாவது 600 யூனிட் வரை பழைய கட்டணமாக 2446 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 310 ரூபாய் சேர்த்து ரூ 2756 ஆக செலுத்த வேண்டும். 700 யூனிட்டுகள் 700 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 550 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 700 யூனிட் வரை பழைய கட்டணமாக 3110 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 550 ரூபாய் சேர்த்து ரூ 3660 ஆக செலுத்த வேண்டும். 800 யூனிட்டுகள் 800 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 790 கூடுதலாக செலுத்த வேண்டும்.
அதாவது 800 யூனிட் வரை பழைய கட்டணமாக 3760 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 790 ரூபாய் சேர்த்து ரூ 4550 ஆக செலுத்த வேண்டும். 900 யூனிட்டுகள் 900 யூனிட்டுகள் வரை மின்சாரத்தை பயன்படுத்துவோர் இரு மாதங்களுக்கு ரூ 1130 கூடுதலாக செலுத்த வேண்டும். அதாவது 900 யூனிட் வரை பழைய கட்டணமாக 4420 ரூபாய் செலுத்தி வந்த நிலையில் இனி 1130 ரூபாய் சேர்த்து ரூ 5550 ஆக செலுத்த வேண்டும். இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அரசியல்வாதிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுக்கிறார்கள்