.
சென்னையின் மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தும் இடத்தை விரிவுபடுத்த சி.எம்.ஆர்.எல். திட்டமிட்டுள்ளது.
சென்னை மெட்ரோ நிலையங்களுக்கு வருகைதரும் பயணிகள் இரு சக்கர வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்களையே சார்ந்துள்ளனர்.
பார்க்கிங் வசதி கேட்டு அதிகரித்து வரும் மக்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் இந்த திட்டத்தை சில ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.
கோயம்பேடு, அரும்பாக்கம், மீனம்பாக்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட், லிட்டில் மவுண்ட், மண்ணடி மற்றும் சென்னை விமான நிலையங்களில் அமைக்கப்பட்டிருக்கும் மெட்ரோ நிலையத்தில் பார்க்கிங் வசதியை விரிவுபடுத்துவதற்கான ஏற்பாட்டுப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.) அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு சில நிலையங்களில் மட்டுமே மினி பேருந்துகள் செல்லும் வசதி இயக்கப்படுகின்றன, எனவே, பெரும்பாலான பயணிகள் நிலையத்திற்கு பயணிக்க இரு சக்கர வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்களை நம்பியுள்ளனர்.
பல்லாவரம், குரோம்பேட்டை, சிட்லப்பாக்கம் மற்றும் தாம்பரம் போன்ற தெற்குப் பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையம் மிக அருகில் உள்ள நிலையமாகும். இதனால், ஏராளமான பயணிகள் மீனம்பாக்கம் சென்று வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
சென்னை விமான நிலையத்திலும், மீனம்பாக்கத்திலும் வாகனங்களை நிறுத்துவதற்கு, இந்திய விமான நிலைய ஆணையத்திடம் (AAI) CMRL கூடுதல் இடத்தைக் கேட்டுள்ளது, மேலும் அவர்கள் பார்க்கிங் இடத்தை நீட்டிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அதேபோல், கோயம்பேடு 8,500 பயணிகளைக் கொண்ட மற்றொரு முக்கியமான நிலையமாகும். லிட்டில் மவுண்ட், செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் மண்ணடி ஆகிய ஒவ்வொரு நிலையத்திலும் சுமார் 4,000 மக்கள் பயணம் செய்கின்றனர்.
மேலும் வாகன நிறுத்துமிடத்திற்கான கோரிக்கைகளை பயணிகளிடம் இருந்து பெற்று, பார்க்கிங் வசதிகளை பூர்த்தி செய்வதற்காக குறிப்பிட்ட நிலையங்களில் இவ்வசதியை கொண்டுவர இருக்கிறார்கள்.