சீன இயந்திரங்கள் வர தாமதம்: சென்னை மெட்ரோ பேஸ்-2 பணிகள் திட்டமிட்டபடி தொடங்குமா?
08 Sep,2022
சென்னையின் மெட்ரோ ரயில் பாதைக்கு சுரங்கப்பாதை தோண்டும் இயந்திரங்கள் நகருக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, சுமார் 118 கிலோ மீட்டர் தொலைவிற்கு 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமானப்பணி 63,246 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறுகிறது.
இந்த திட்டத்தில் உயர்மட்ட பாலம் மற்றும் சுரங்கப்பாதை ஆகியவை ரயில் பாதைக்காக காட்டப்படுகிறது. சுரங்கப்பாதை தோண்டும் பணிகளை அடுத்த மாதத்திலிருந்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆரம்பிக்கவிருக்கிறது.
இப்பணிக்காக சென்னைக்கு சீனாவில் இருந்து 23 ராட்சத சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை 3 இயந்திரங்கள் மட்டுமே சென்னையை வந்தடைந்துள்ளன.
மீதமுள்ள 20 இயந்திரங்கள் சென்னை வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதால், திட்டமிட்ட பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.