உங்களை பணக்காரராக்கும் Google.. இதை செய்து ரூ. 25 லட்சம் பரிசை பெறுங்கள்
07 Sep,2022
. இதை செய்து ரூ. 25 லட்சம் பரிசை பெறுங்கள்
கூகுள் தனது பயனாளர்களுக்கு பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் நீங்கள் ரூ.25 லட்சம் வரை வெகுமதியை வெல்ல முடியும். இதற்காக நீங்கள் கூகுள் நிறுவனத்தின் மென்பொருளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிய வேண்டும். இதன் மூலம் $100 முதல் $31,337 வரையிலான பரிசுகளை வெல்லலாம். அதாவது நீங்கள் கோடீஸ்வரராகும் வாய்ப்பை கூகுள் வழங்குகிறது. இதற்காக பக் பவுண்டி திட்டத்தை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன் ஓப்பன் சோர்ஸ் மென்பொருளான Google OSS-ல் உள்ள பிழைக்களை கண்டுபிடிப்பவர்களுக்கு வெகுமதி வழங்கப்படும். அதன் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கூகுள் ஓஎஸ்எஸ்ஸில் உள்ள பிழைக்களை கண்டுபிடிப்பவர்களுக்கு நிறுவனம் $31,337 வரை அதாவது 25 லட்சம் ரூபாய் வரை வெகுமதி அளிக்கும். இந்த வெகுமதியைப் பெற, திறந்த மூல திட்டத்தில் உள்ள பாதிப்பைக் கண்டறிய வேண்டும். இந்த வெகுமதிகள் $100 முதல் $31337 வரை இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. உங்களுக்கு வழங்கப்படும் வெகுமதி என்பது, நீங்கள் கண்டறியும் பிழையின் அளவு பொறுத்தது. இதற்காக கூகுள் நிறுவனம் ஒரு புதிய பக் பவுண்டி திட்டத்தை அறிவித்துள்ளது.
பக் பவுண்டி திட்டம் என்பது எந்தவொரு மென்பொருளும் அல்லது செயலியும் வெளியிடப்படுவதற்கு முன்னர் தவறவிட்ட சில பிழைகளைக் கண்டறியவதற்காக பல நிறுவனங்களுக்கு இந்தத்திட்டம் உதவுகிறது. கூகுள் மட்டுமில்லாமல் ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இது போன்ற செயல்பாடுகளை செய்து வருகின்றன.
பக் பவுண்டி திட்டம் மூலம் செயலிகள், சேவைகள் அல்லது இயக்க முறைமைகளில் உள்ள வழக்கத்திற்கு மாறான அல்லது குறைபாடுகளைக் கண்டறிவோருக்கு வெகுமதி வழங்கப்படும் என்று தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தெரிவித்துள்ளது. இந்த வெகுமதி என்ற பரிசு Bazel, Angular, Golang, Protocol buffers மற்றும் Fuchsia போன்ற முக்கியமான திட்டங்களில் குறைபாடுகளைக் கண்டறிவதற்காக வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
Google இன் OSS VRP இன் முதன்மையான கவனம் பாதுகாப்புச் சிக்கல்களில் உள்ள குறைகளை தீர்ப்பதில் உள்ளது. இதன்மூலம் மென்பொருள் விநியோகச் சங்கிலியைப் பாதிக்கும் பாதுகாப்புக் குறைபாடு தீர்க்கப்படும். இந்த பக் பவுண்டி திட்டத்தில் பங்கேற்க விரும்பம் உள்ளவர்கள் விதிகள் மற்றும் திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களை முன்கூட்டியே படிக்குமாறு கூகுள் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்குப் பிறகு, ஹேக்கிங் செய்ய முயற்சிக்கவும், அதில் ஏதேனும் குறைபாடு கண்டறியப்பட்டால், அதைப் பற்றிய தகவலைக் கொடுக்க வேண்டும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீங்கள் பரிசுகளை வெல்லலாம்.