காரை விட்டு இறங்கி நினைவிட வளாகத்துக்குள் நடந்து வந்த ராகுல்காந்தியின் முகம் வழக்கமான புன்னகையை இழந்து இருந்தது. குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட இடத்திற்கு கடைசியாக ராஜீவ் நடந்து வந்த பாதை பூ போட்டு அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. இந்திய வரலாற்றில் இடம் பிடித்த பகுதி. ஒரு மாபெரும் தலைவர் குண்டுகளால் சிதறடிக்கப்பட்டு உயிர் மாய்த்த இடம். அன்று சிந்திய ரத்தம் வரலாற்று பக்கங்களில் என்றும் காயாமல் நிலைத்து இருக்கும்.
அதே இடத்தில் இன்று காலை 7.15 மணி... வானம் மப்பும், மந்தாரமுமாக இதமான சூழ்நிலையை கொடுத்து கொண்டிருந்தது. ஆனால் வந்தவர்கள் நெஞ்சமெல்லாம் பழைய நினைவுகள் முட்டி மோதியது. தந்தை ராஜீவ்காந்தி கட்டிக்காத்த காங்கிரசை வரும் காலத்திலும் கட்டி காப்பதற்காக கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைபயணம் மேற்கொள்வதற்கு முன்பு தந்தையின் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ராகுல்காந்தி வந்தார். இதையும் படியுங்கள்: முல்லை பெரியாறு அணையில் இருந்து மேலும் ஒரு சுரங்கப்பாதை-
அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு நினைவிடத்திற்கு வெளியே காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்த ராகுலின் கண்கள் நாலாபுறமும் சுற்றிச்சுழன்றன. ராஜீவ் இறந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. நினைவிடம் கட்டி முடித்தும் 19 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இதுவரை தந்தையின் நினைவிடத்துக்கு ராகுல் வந்ததில்லை. காரணம் துயரம் அவருக்கு தடை போட்டது. ஒருமுறை தனது சகோதரி பிரியங்காவுடன் நினைவிடத்துக்கு வந்தபோது உள்ளே செல்ல முடியாமல் பிரியங்கா துக்கத்தில் தரையில் அமர்ந்து கதற தொடங்கி விட்டார்.
அவரை ஆறுதல்படுத்த முடியாமல் தவித்த ராகுல் திரும்பி சென்று விட்டார். அதன்பிறகு இன்றுதான் முதல்முறையாக நினைவிடத்திற்கு வந்தார். இதையும் படியுங்கள்: கியாஸ் சிலிண்டர் முன்பதிவு செய்வதில் திடீர் கோளாறு காரை விட்டு இறங்கி நினைவிட வளாகத்துக்குள் நடந்து வந்த ராகுல்காந்தியின் முகம் வழக்கமான புன்னகையை இழந்து இருந்தது. "அப்பா நீங்கள் வந்த இடமும், சென்ற இடமும் இதுதானா...?
உங்கள் பாசத்தை சுமந்த நான் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு உங்கள் நினைவுகளை மறக்க முடியாமல் சோகத்தை சுமந்து வருகிறேன்" என்பதைத்தான் அவரது முகம் வெளிப்படுத்தியது. நினைவிடத்தின் முன்பு வந்ததும் சக தலைவர்களுடன் மலர் அஞ்சலி செலுத்தினார். அப்போது ராஜீவ் படத்தின் முன்பு வைக்கப்பட்டு இருந்த 3 மாம்பழங்கள் அவரது கண்களில் பட்டன. ஆந்திராவை சேர்ந்த இந்த மாம்பழம் ராஜீவுக்கு மிகவும் பிடித்ததாம். அவர் கொல்லப்படுவதற்கு முன்பு வீட்டில் இருந்து புறப்படும்போது இந்த மாம்பழத்தை தான் ருசித்து சாப்பிட்டுள்ளார். அப்போது நிச்சயம் தனது குழந்தைகளுக்கும் கொடுத்து இருப்பார். அந்த நினைவும் ராகுலுக்கு நிச்சயமாக வந்திருக்கும்.
பின்னர் எதிரே விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்பில் அமர்ந்து ராகுல் பிரார்த்தனையில் ஈடுபட்டார். 16 நிமிடங்கள் பிரார்த்தனை செய்தார். இந்த குறுகிய நேரத்தில் ஆறாத, மறையாத நினைவுகள் எத்தனை எத்தனை ராகுலின் இதயத்தில் எழுந்திருக்கும்...
"அனைவருக்கும் கிடைத்த பரிசு எனக்கும் கிடைத்தது. ஆனால் அனைவருக்கும் கிடைக்காத காயம் எனக்கு கிடைத்தது. அது என் அப்பாவை என்னிடம் இருந்து பிரித்தது" என்று ராகுலின் மனம் துடித்திருக்கும். 1991 மே 21 மறக்க முடியாத அந்த நாள். பிரசாரத்துக்கு புறப்பட்ட ராஜீவுக்கு சோனியா விடை கொடுக்க, சகோதரி பிரியங்காவுடன் அப்பாவுக்கு டாடா போட்டு அனுப்பிய அந்த நினைவு மறந்திருக்குமா? அந்த நாள் ஞாபகமும், பட்ட காயமும் நெஞ்சில் அலை அலையாக வந்ததை அவர் அமர்ந்திருந்த கோலத்தை வைத்து பார்க்க முடிந்தது.
குண்டு வெடிப்பு நடத்தப்பட்ட இடத்திற்கு கடைசியாக ராஜீவ் நடந்து வந்த பாதை பூ போட்டு அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது. அதை காங்கிரஸ் எம்.எல்.ஏ. செல்வப் பெருந்தகை ராகுலிடம் சுட்டிக்காட்டி நினைவுபடுத்தினார். "அப்பா நீ செல்லும் பாதையெல்லாம் மக்கள் பூக்களை தூவி வரவேற்பார்கள். இது நீ கடைசியாக நடந்து வந்த பாதை. இன்றும் பூக்கள் விரித்து நினைவுபடுத்தப்படுகிறது. கண்ணீரோடு அதை காண்கிறேன். கண்ணீரோடு அதை காண்கிறேன். அப்பா நீ பிரசாரம் முடித்துவிட்டு திரும்புவதை எதிர்பார்த்து ஆனந்த பவனத்தில் அம்மாவும், சகோதரியும், நானும் காத்திருந்தோம்.
ஆனால் சிரித்த முகத்தோடு புறப்பட்டு சென்ற உன் உடலை சிதைத்து சிதறிய நிலையில் மூட்டை கட்டி கொண்டு வந்ததும் நொறுங்கி போனோம். இன்று வரை அந்த துயரம் வந்து போகிறதே? எப்படி மறப்பேன்" என்று தவித்து இருக்க வேண்டும். அதனால்தான் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தார். ஒரு கட்டத்தில் பெருகி வந்த கண்ணீரை தன் விரல்களால் துடைத்து கட்டுப்படுத்திக் கொண்டதை பார்க்க முடிந்தது. ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் குண்டு வெடிக்கும்போது மலர் மாலைகள் சின்னாபின்னமாகி அந்தரத்தில் பறப்பது, ராஜீவ் மிரண்டு தரையில் சாய்வது போன்ற படம் பொறிக்கப்பட்டுள்ளது.
அதன் முன் அமர்ந்திருந்த ராகுல் உன்னை பார்த்து எதிரிகள் மிரண்டு இருப்பார்கள். ஆனால் இந்த இடத்தில் அப்பா எதிரிகளின் குண்டால் நீங்கள் மிரண்டு இருக்கிறீர்கள். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த காயம் எங்கள் இதயங்களை விட்டு மறையுமா? என்ற உணர்வுகள்தான் ராகுலின் இதயத்தை பிசைந்திருக்கும். அதை உணர்த்துவதுபோல் முதலில் நிர்வாகிகளுடன் அஞ்சலி செலுத்திவிட்டு பிரார்த்தனையில் இருந்த ராகுல் திடீரென்று தன்னந்தனியாக எழுந்து சென்று ராகுல் நினைவிடத்துக்கு முன்பு கை கூப்பியபடி நின்று சில வினாடிகள் வணங்கியபடி மவுனமாக நின்றார்.
பின்னர் ராகுல் மீண்டும் மலர்களை எடுத்து தந்தையின் பாதத்தில் போட்டு அஞ்சலி செலுத்தி விட்டு தனியாக நினைவிடத்தை சுற்றி வந்தார். சோகமான முகமும், கலங்கி போன்ற இதயமுமாக அவர் சுற்றி வந்ததை பார்த்துக்கொண்டிருந்த எல்லோருடைய இதயமும் கனத்துப்போனது. அந்த ஓரிரு வினாடிகள் மக்கள் திரண்டிருந்த அந்த பகுதியில் நிசப்தம் நிலவியது. அதைத்தொடர்ந்து அப்பா நீங்கள் கட்டிக்காத்த காங்கிரசை மீண்டும் கட்டி எழுப்ப உங்கள் ஆசியோடு இந்த நாட்டை சுற்றி வர புறப்படுகிறேன்.
இசை நிகழ்ச்சி நடத்திய வீணை காயத்ரியை பாராட்டிய ராகுல் காந்தி "அசல் முன் நிழல் நடப்பது போல் என்றும் என் முன்னால் நீங்கள் நடப்பீர்களே முன் மாதிரியாக அப்பா..." என்று நினைத்தபடியே புறப்பட்டார். அந்த இறுக்கமான சூழ்நிலையிலும் கிளம்பி செல்லும்போது இசை நிகழ்ச்சி நடத்திய வீணை காயத்ரி அருகில் சென்று கையெடுத்து வணங்கி நன்றாக வாசித்தீர்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். ராஜீவ்காந்தியின் ஆன்மா நிச்சயம் அவரது அன்பு மகனுக்கு துணை நிற்கும்.