இலங்கைக்கு நெருக்கடி கொடுப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது- இந்தியாவுக்கு சீனா மிரட்டல்
27 Aug,2022
இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கப்பல் வருகையை தள்ளி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண் டது. உளவு கப்பல் விவகாரத்தில்
இந்தியா தலையிட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்து இருந்தது. பிஜீங்: சீனாவின் உளவு கப்பலான 'யுவான் வாங்-5' சமீபத்தில் இலங்கையின் ஹம்பாந் தோட்டை துறைமுகத்துக்கு வந்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கப்பல் வருகையை தள்ளி வைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டது. ஆனால் அதை சீனா ஏற்க மறுத்ததால் இந்தியாவின் எதிர்ப்பை மீறி சீன கப்பல், துறைமுகத்துக்கு வர இலங்கை அனுமதி அளித்தது. உளவு கப்பல் விவகாரத்தில்
இந்தியா தலையிட்டதற்கு சீனா கண்டனம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் உளவு கப்பல் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா மிரட்டல் விடுத்துள்ளது. இலங்கைக்கான சீன தூதர் ஜென்ஹாங், ஒரே சீனா கொள்கையில் இருந்து யுவான் வாங்-5 வரை என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் கூறியிருப்பதாவதுஇலங்கையை சில நாடுகள் எப்போதும் கொடுமைப்படுத்துதற்கும்
அந்நாட்டின் இறைாண்மை மற்றும் சுதந்திரத்தை காலில் போட்டு மிதிக்கவும் பல்வேறு ஆதாரமற்ற தகவல்களை கூறுகின்றன. இலங்கை மக்கள் இன்னும் பொருளாதார மற்றும் மனிதாபிமான சிக்கல்களை எதிர் கொண்டுள்ள நிலையில், மனித உரிமைகள் பற்றி எப்போதும் பேசும் அந்த நாடுகள், இலங்கையின் மனித உரிமைகளை நெருக்கடியை தீர்க்க உதவுவார்களா? அல்லது
இலங்கை உள் விவகாரங்களில் தலையிட்டு அந்நாட்டு மக்களின் காயத்தில் தொடர்ந்து உப்புத் தேய்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இலங்கையின் தேசிய இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றில் எந்தவிதமான மீறல்களையும் பொறுத்துக் கொள்ள முடியாது.
சீன ஆராய்ச்சி கப்பல் 'யுவான் வாங்-5' இலங்கைக்கு பயணம் செய்ய அங்கீகரிப்பது இலங்கை அரசாங்கத்தால் முழுமையாக அதன் இறையாண்மைக்குட்பட்டு எடுக்கப்பட்ட முடிவாகும். பாதுகாப்பு கவலைகள் என்று கூறி தடைகள் ஏற்படுத்துவது, சிலர் ஆதாரம் இல்லாமல் இலங்கை உள் விவகாரங்களில் தலையிடுவது
நடைமுறையில் உள்ளது. அதிர்ஷ்டவசமாக சீனா, இலங்கையின் கூட்டு முயற்சியுடன் பிரச்சினையின்றி சரியாக தீர்க்கப்பட்டது. இது இலங்கையின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் சர்வதேச நியாயத்தையும் நீதியையும் மீண்டும் பாதுகாக்கிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். மேலும் அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் மேற் கொண்டதை கடுமையாக விமர்சித்துள்ளார்