இலங்கைக்கு இந்தியா பாரிய உதவிகளை வழங்குவது சாத்தியமில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான முன்னாள் இந்திய தூதுவர் அசோக் காந்த இந்தியா எச்சரிக்கையாகயிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவுவதற்கான 6பில்லியன் டொலர் உதவி முன்னொருபோதும் இல்லாதது என குறிப்பிட்டுள்ள முன்னாள் தூதுவர் இந்தியா வேறு எந்த நாட்டிற்கும் இவ்வளவு பெரும் உதவியை வழங்கியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான உதவி சாத்தியமற்றது என தெரிவித்துள்ள அவர் பொருளாதார நெருக்கடியில்சிக்கியுள்ள நாட்டிற்கு இந்தியாவால் எவ்வளவு பொருளாதார உதவியை வழங்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதில் இந்தியா சர்வதேசசமூகத்தைஅணிதிரட்டும் இலங்கைக்கானசர்வதேச நாணயநிதியத்தின் உதவியை வேகமாக பெற்றுக்கொடுக்கும்நடவடிக்களை மேற்கொள்ளவேண்டும்என அவர் தெரிவித்துள்ளார்.
சீனா குறித்த கற்கை நெறிகளிற்கான சென்னை நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் சர்வதேச சூழ்நிலையும் சாதகமாகயில்லை40 நாடுகள் கடும் கடன் நெருக்கடியில் சிக்குண்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
தொடரும் உக்ரைன் யுத்தம் மேற்குலகம் கடன்நெருக்கடியால் பாதிக்கப்பட்ட நாடுகளிற்கு உதவமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி கடந்த சில வருடங்களாகவே உருவாகி வந்தவொன்று என சுட்டிக்காட்டிய அசோக் காந்த கட்டமைப்பு மற்றும் பாரம்பரியம் குறித்த சிக்கல்களின் கலவையே இந்த நெருக்கடி எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் கொவிட் பெருந்தொற்று மோசமான தவறான நிர்வாகம் உறவுமுறை மற்றும் ஊழல் ஆகியவற்றை அவர் பட்டியலிட்டுள்ளார்.
இலங்கையின் அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள்இந்திய தூதுவர்நிலைமை ஓரளவு ஸ்திரமானதாக மாறியுள்ளது பிரபலமான அரகலய தனது வேகத்தை இழந்துவிட்டது ஆனால் அது முடிவிற்கு வந்துவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆட்சியிலிருந்த ராஜபக்ச வம்சாவளியின் வெளியேற்றத்துடன் மக்களின் முக்கியமான கோரிக்கை நிறைவேறியது என தெரிவித்துள்ள முன்னாள்இந்திய தூதுவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உடனடி மாற்றீடு இல்லைஎனவும் தெரிவித்துள்ளார்.
ராஜபக்சாக்களிற்கான முக்கிய பௌத்த ஆதரவு இல்லாமல் போயுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர் மகிந்த ராஜபக்ச வீழ்ச்சியை சந்தித்துள்ளார் ஆனால் அவரின் கதை இன்னமும் முடிவுக்குவரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பில் இந்தியா எதிர்கொண்டுள்ள இக்கட்டான நிலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் வரலாற்று கலாச்சார தொடர்புகளை கருத்தில் கொண்டு இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்க விரும்புகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு ஆதரவளிக்கும் நாடு என்ற தனித்துவத்தை இந்தியா பேணவிரும்பும் அதேவேளை அங்கு காணப்படும் அரசியல் நிலைமையிலிருந்து தன்னை தனிமைப்படுத்த விரும்புகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.