முதல் பயணத்தை துவக்கியது'ஆகாசா ஏர்' விமான நிறுவனம்
10 Aug,2022
புதுடில்லி-நாட்டின் புதிய விமானபோக்குவரத்து நிறுவன மான, 'ஆகாசா ஏர்' மும்பை - ஆமதாபாத் இடையே முதல் பயணத்தை நேற்று துவக்கியது.
முன்பதிவு'
ஆகாசா ஏர்' என்ற தனியார் விமான போக்குவரத்து நிறுவனம், பயணியருக்கான போக்குவரத்தை துவக்க, டி.ஜி.சி.ஏ., எனப்படும் விமானப் போக்குவரத்துத் துறை இயக்குனரகம் சமீபத்தில் அனுமதி வழங்கியது. இதையடுத்து, ஆமதாபாத், பெங்களூரு, மும்பை, கொச்சி இடையே தங்கள் விமான சேவையை முதல்கட்டமாக துவங்க அந்நிறுவனம் முடிவு செய்தது.இதற்கான பயணச் சீட்டு முன்பதிவு கடந்த மாதம் துவங்கியது.
முன்பதிவு துவக்கம்
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து குஜராத்தின் ஆமதாபாதுக்கு ஆகாசா ஏர் நிறுவனத்தின் முதல் பயணியர் விமானம் நேற்று பயணத்தை துவக்கியது. மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர்ஜோதிராதித்ய சிந்தியா, இணை அமைச்சர் விஜய்குமார் சிங் ஆகியோர் பயணத்தை துவக்கி வைத்தனர்
.மும்பை - ஆமதாபாத் இடையே வாரத்துக்கு 28 விமானங்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 13ம் தேதி முதல், கர்நாடகாவின் பெங்களூரு, கேரளாவின் கொச்சி இடையே விமான சேவை துவக்க உள்ளது. இதற்கான பயணச்சீட்டு முன்பதிவு துவங்கியது. இந்த தகவலை ஆகாசா ஏர் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான வினய் துபே நேற்று தெரிவித்தார்.