இலங்கைக்கு தமிழ் நாட்டிலிருந்து 74 கோடி இந்திய ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் அடங்கிய மற்றுமொரு கப்பல் விரைவில்..
24 Jul,2022
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்படும் மூன்றாம் தொகுதி உதவி பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்திய மக்களவை உறுப்பினரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதியின் தலைமையில் இதற்கான நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய 74 கோடி இந்திய ரூபா பெறுமதியான உதவி பொருட்கள் இவ்வாறு அனுப்பப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால்மா மற்றும் மருத்துப் பொருட்கள் என்பன இவ்வாறு தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 16 ஆயிரத்து 356 மெற்றிக் டன் அரிசி, 201 டன் பால்மா மற்றும் 39 டன் நிறையுடைய மருந்து பொருட்களும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து கடந்த மே மாதம் 18ஆம் திகதி முதலாம் தொகுதி உதவி பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தொடர்ந்து கடந்த மாதம் 22ஆம் திகதி இரண்டாம் தொகுதி உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.