மாணவிகளுக்கு 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை -ஆசிரியர்களுக்கு எதிராக போராட்டம்
20 Jul,2022
கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வரும் இரண்டு ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடந்தது மானாமதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரையில் சி. எஸ். ஐ செவித்திறன் குறைவு உடையோர் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். பள்ளியில் படித்து வரும் பெண் மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் அடிக்கடி பாலியல் தொழில் கொடுத்து வருவதாக புகார் எழுந்து வந்திருக்கின்றன.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார்கள் இந்த ஆசிரியர்கள். இதை அடுத்து கடந்த 14ஆம் தேதி அன்று காது கேளாதோர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சிவகங்கை ஆட்சி அலுவலகத்திலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
இந்த புகாரின் பேரில் இதுவரைக்கும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் மானாமதுரை தலைமை தகவல் அலுவலகம் முன்பாக காதுகேளாதோர் சங்கத்தினர் ஒன்று திரண்டு பாலியல் சீண்டல்களுக்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்ய வேண்டும், பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தினர் மானாமதுரை போலீஸ் டி ஜே பி டி எஸ் பி இடம் சந்தித்து நேரில் புகார் அளித்தனர் மானாமதுரை தாசில்தார் ஆகியோர் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினர் விசாரணை முடிவில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் ஆல்பர்ட் ஆபிரகாம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உதவி செய்யப்பட்டு இருக்கிறது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்து வந்திருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது. அந்த ஆசிரியர் மீது துறை ரீதியாகவும், காவல்துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு ஆசிரியர்கள் மீது புகார் இருக்கும் நிலையில் ஒரு ஆசிரியர் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.