மின்கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு பழனிசாமி, ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம்
19 Jul,2022
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால், மின்கட்டண உயர்வை தாங்கி கொள்ள முடியாது. தவிர்க்கவே முடியாத சூழலில், மின்சார கட்டணத்தை ஓரளவு உயர்த்துவதை ஏற்று கொள்ள முடியும். ஆனால், அனைத்து பிரிவினருக்கும் சராசரியாக 20 சதவீதம் அளவுக்கும், அதிகபட்சமாக 52 சதவீதம் வரையிலும் மின்கட்டணம் உயர்த்துவது நியாயமற்றது. பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரத்தில், கோவிட் பரவல் உள்ளிட்ட காரணங்களால் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் மின்சார கட்டணத்தை அவர்களால் தாங்கி கொள்ள முடியாது. அவர்களின் பாதிப்பை ஏற்படுத்தும். மின்சார கட்டண உயர்வை திரும்ப பெறுவதுடன், நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம், மின்வாரியத்தை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல சாக்கு போக்குகளை சொல்லி தமிழகத்தின் மின் துறை அமைச்சர் அனைத்து தரப்பட்ட மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளார். தற்போது, நடைபெற்று வரும் ஆட்சியை, சிலரை பணக்காரர்களாக ஆக்க தமிழக மின்சார வாரியம் ஊழலின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. நீங்கள் செல்வ செழிப்புடன் இருக்க மக்களை அவதிக்குள்ளாக்குவதா?
மின்கட்டண உயர்வுக்கு மத்திய அரசின் அழுத்தம் தான் காரணம் என அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகிறார். டாஸ்மாக் கட்டணத்தை உயர்த்தினால் கூட மத்திய அரசு தான் காரணம் என்று சொல்வார்களா? இவர்களின் நிர்வாக திறமையற்ற நடவடிக்கைகளால் தான் மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளனர். எல்லாவற்றிற்கும் பிரதமர் மோடியை குற்றம்சாட்டுவதற்கு இவர்களுக்கு வாடிக்கை. மத்திய அரசு சொல்வது அனைத்தையும் அவர்கள் கேட்கிறார்களா?இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.