இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த எஸ்.ஐ.
14 Jul,2022
காவல்துறையில் போலீசாக வேண்டும் என்று பயிற்சி பெற்று வந்த அந்த இளம் பெண்ணை போலீஸ் வேலை வாங்கி தருவதாக சொல்லி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை செய்து வந்திருக்கிறார் அந்த போலீஸ் எஸ்.ஐ ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அந்த இளம் பெண் அழுது தற்போது இந்த விவகாரம் வெளியே வந்திருக்கிறது .
தெலுங்கானா மாநிலத்தில் கொமரம்பீம் ஆசியாபாத் மாவட்டம். இம்மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் காவல்துறையில் சேர வேண்டும் என்கிற ஆர்வத்தில் சேர்வதற்காக தினமும் பயிற்சி எடுத்து வந்திருக்கிறார். அந்த அந்தப் பெண்ணுக்கு போலீஸ் எஸ்ஐ உடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணுக்கு போலீஸ் வேலை வாங்கி தருவேன் என்று அடிக்கடி காவல் நிலையத்திற்கு வரவழைத்து இருக்கிறார்.
அந்த இளம்பெண்ணிடம் போலீஸ் வேலையில் சேர்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்கிறேன் என்று சொல்லி, அதற்கு தேவையான புத்தகங்களையும் வாங்கி தருவதாக சொல்லி இருக்கிறார். ஆனால் தான் சொன்னபடி எல்லாம் கேட்டால் தான் இதுவெல்லாம் நடக்கும் என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். இதை கேட்ட அந்த பெண் அந்த எஸ் ஐ உடன் பல இடங்களுக்கு சென்று இருக்கிறார்.
அப்போது தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி இருக்கிறார். அந்த பெண் தயங்கிய போதும் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு வைத்திருக்கிறார். தொடர்ந்து அந்த பெண்ணை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்திருக்கிறார்.
ஒரு கட்டத்திற்கு மேல் அந்த எஸ்.ஐ. கொடுத்த பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் தனக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து பெற்றவரிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதை அடுத்து அந்த போலீஸ் எஸ்.ஐ. மீது காவல் துறையில் புகார் கொடுத்து இருக்கிறார்கள். அவர் மீது இதுபோன்ற ஏற்கனவே பல புகார்கள் உள்ளது என்று உளவுத்துறை அதிகாரிகள் சிறப்பு விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதை அடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த எஸ்.ஐ இடம் துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.