இந்தியாவில் புதிய வகை ஒமைக்ரான்: உலக சுகாதார அமைப்பு
07 Jul,2022
தென் ஆப்ரிக்காவில் கடந்தாண்டு இறுதியில் ஒமைக்ரான் கொரோனா கண்டறியப்பட்டது. இது வேகமாக பரவும், அதிக உருமாற்றம் அடையக்கூடியது என தெரிவிக்கப்பட்டது. அதேபோல், உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ஒமைக்ரான் வேகமாக பரவியது. மேலும், பி.ஏ.,1, பி.ஏ.,2, பி.ஏ.,3, பி.ஏ.,4, பி.ஏ.,5 போன்ற பல மரபணு மாறிய கொரோனா உருவெடுத்தது. தற்போது பி.ஏ.,2 வகை கொரோனா மேலும் உருமாற்றம் அடைந்து பி.ஏ.,2.75 என்னும் புதிய வகை கொரோனாவாக உருவெடுத்துள்ளது. இது இந்தியாவில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், ‛கடந்த இரு வாரங்களில் கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் 30 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பி.ஏ.,4 மற்றும் பி.ஏ.,5 வகை ஒமைக்ரான் அலை நிலவுகிறது. இந்தியாவில் புதிய பி.ஏ.,2.75 வகை ஒமைக்ரான் மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவை தொடர்ந்து 10 நாடுகளிலும் இவ்வகை கொரோனா பரவியுள்ளது' எனக் கூறியுள்ளார்.