185 பயணிகளுடன் நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்!
20 Jun,2022
இந்தியாவின் பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து, தலைநகர் டெல்லிக்கு புறப்பட்ட ஏற்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்றில் தொழில்நுட்பக் கோளாறால் விமானத்தின் வெளிப்புறத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்த நிலையில் அவசரமாக தரையிரக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்த 185 பயணிகளும் விபத்தில் சிக்காமல் பத்திரமாக தப்பித்தனர்.
பறவை மோதியதால் தீப்பிடித்த விமானம்
தலைநகர் டெல்லிக்கு, ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று இன்று பகல் 12 மணியளவில் புறப்படத் தயாரானது. ஸ்பைஸ்ஜெட் எனும் அந்த விமானம் வானில் பறக்கத் தொடங்கியதுடன் விமானத்தில் பறவை மோதியதால், ஒரு இயந்திரத்தில் தீப்பிடித்தது.
வானத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் தீப்பற்றியதை பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மாவட்ட மற்றும் விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
பாட்னா விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பிய விமானம்
185 பயணிகளுடன் நடுவானில் தீப்பற்றி எரிந்த விமானம்! வெளியாகிய பின்னணி (காணொளி)
இதனையடுத்து, டெல்லி செல்லும் விமானம் அவசரமாக பாட்னா விமான நிலையத்திற்கு மீண்டும் திரும்பியது.
அந்த விமானத்தில் இருந்த 185 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டதால், அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டு பெரும் விமான விபத்தும், உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது.
இது தொடர்பான பரபர வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
பாட்னா மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திரசேகர் சிங் கூறுகையில், தொழில்நுட்பக் கோளாறே இதற்கு காரணம், இது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.