மேலும் 4 கோடி கிலோ டீசல் இலங்கைக்கு அனுப்பிவைப்பு
01 Jun,2022
இலங்கைக்கு இந்தியா மேலும் நான்கு கோடி கிலோ டீசலை நேற்று அனுப்பி வைத்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.அன்னியச் செலாவணி பற்றாக்குறை விலைவாசி உயர்வு எரிபொருள் கட்டுப்பாடு அத்தியாவசியப் பொருட்களுக்குதட்டுப்பாடு மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை அந்நாடு சந்தித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியா இந்தாண்டு மட்டும் 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி மார்ச் ஏப்ரல் மாதங்களில் 40 கோடி கிலோ பெட்ரோலிய பொருட்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டன. இதையடுத்து மே 23ல் நான்கு கோடி கிலோ பெட்ரோல்இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று முன்தினம் மேலும் நான்கு கோடி கிலோ டீசல் உடன் ஒரு கப்பல் இலங்கைக்குச் சென்றுள்ளது.
இது குறித்து இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 'இலங்கைக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தியா அனுப்பிய நான்கு கோடி கிலோ டீசல் கொழும்பு வந்தடைந்துள்ளது'என தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்டை நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைப்படி வேறு எந்த நாட்டிற்கும் செய்யாத உதவிகளை இந்தியா இலங்கைக்கு செய்து வருகிறது