11ம் வகுப்பு மாணவிக்கு சரமாரியாக கத்திக்குத்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு சமீபத்தில் தொடங்கி முடிந்து இருக்கிறது. மொத்தம் 3,262 மையங்களில் 8.69 லட்சம் மாணவ மாணவிகள் பொதுத்தேர்வு எழுதினர்.
தமிழ்நாட்டில் மட்டும் 3,119 மையங்களில் 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ மாணவிகள் பொதுத்தேர்வை எழுதினர். இத்துடன் தனித்தேர்வர்கள் 28,353 பேரும், மாற்றுத்திறனாளிகள் 3,638 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 6 பேரும், சிறைக்கைதிகள் 73 பேரும் பொதுத்தேர்வு எழுதினர்.
இந்த தேர்வில் முறைகேடு நடக்காமல் தடுப்பதற்காக 1000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டது.
கொரோனா நோய் பாதிப்புக்கு பிறகு பொதுத்தேர்வுகள் இந்த ஆண்டு முழுமையாக நடப்பதையொட்டி ஆள்மாறாட்டம், துண்டு சீட்டுகள் வைத்து எழுதுதல், காப்பி அடித்தல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது.
அதேப்போல் பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தடை இல்லாமல் மின்சாரம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
தனித்தேர்வர்களுக்கு 9 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. மேலும் 193 சிறப்பு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். சிறப்பு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வாய்ப்பு வழங்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் ஒரு தேர்வு மையத்திற்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 2 முதல் 4 பேர் வரை நிரந்தரமாக கண்காணிக்கும் விதமாக 250 நிரந்தர உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில் 11ம் வகுப்புக்கான பொதுத்தேர்வும் இன்றுடன் முடிவடைந்துள்ளது. இந்தச் சூழலில் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் 11ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி விட்டு தப்பியோடி விட்டார்.
இந்த கத்திக்குத்தில் மாணவி படுகாயம் அடைந்து துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் படுகாயத்துடன் துடித்த மாணவியை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.