கோமா நிலையில் நித்தியானாந்தா- கைலாசா நாட்டின் நிலை என்ன?
31 May,2022
பாலியல் வன்கொடுமை, ஆட்கடத்தல், மோசடி என்று இந்தியாவின் பல மாநிலங்களில் வழக்குகளில் சிக்கி கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தனது சில சீடர்களுடன் தலைமறைவானவர் சாமியார் நித்தியானந்தா.
கோயில் கட்ட நிதி என்று கூறியும் தன்னை நம்பிவந்தவர்களிடம் சித்துவேலைகளை காட்டி மோசடி செய்தும், அடித்துச் சென்ற பணத்தில் தனித் தீவு ஒன்றை குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, கைலாசா என்ற நாட்டை அறிவித்தார்.
இந்தியாவில் இருந்து ஆட்டைய போட்டுச்சென்ற ஆயிரம் கோடி அளவிலான பணத்தை தங்க கட்டிகலாக்கி வெளிநாட்டு வங்கிகளில் வைத்திருந்த துணிச்சலில் இந்திய அரசுக்கே சவால் விட்டு தப்பித்து வந்தார்.
கைலாசாவை நாடு என்று அவர் சொல்லிக்கொண்டாலும் உண்மையில் அவர் வசிப்பது கடல் சூழ்ந்த ஒரு தீவு பகுதி. திருவண்ணாமலையில் பிறந்து வளர்ந்த நித்தியானந்தாவிற்கு ஆரம்பத்தில் கைலாசா குஜாலாக இருந்தது.
ஆனால் போக போக அதுவே ஆபத்தாக மாறியது. கடற்காற்றும் இந்திய முறை உணவு கிடைக்காததாலும் நித்திக்கு தொடர் தொந்தரவுகள் தொடங்கின.
உடல் மெலிந்து சோர்வான நித்திக்கு கல்லீரல் அலர்ஜீயும், சிறுநீரக தொந்தரவும் ஏற்பட்டுள்ளது. போக போக நுரையிரல் தொற்றுவரை சென்று தற்போது மூச்சு விட முடியாமல் ஆக்சிஜன் உதவியுடன் இருந்து வருகின்றார்.
இந்திய அரசால் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி என்பதால் நித்தியானந்தாவால் கோடி கணக்கில் பணம் இருந்தும், தனி விமானம் இருந்தும் சிகிச்சைக்காக வேறு எங்கும் செல்லமுடியாத நிலை உள்ளது.
கடந்த இரண்டு வாரமாக முற்றிலும் முடங்கிய நிலையில் இருந்த நித்தியானந்தாவின் உடல் நிலை மேலும் மோசமடைந்து கோமா நிலைக்கு சென்றுள்ளது.
கருணாநிதியின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுபவர்களுக்குதான் கட்சியில் முக்கிய பொறுப்பு- அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
நித்தியானந்தா உடல்நிலை குறித்து அவரது சீடர்கள், சாமி நித்தியானந்தா பூரண சமாதி நிலைக்கு சென்றதால் அனைவரும் பிராத்தியுங்கள் என்று வேண்டுகோள்விடுத்துள்ளனர்.
இந்நிலையில் சிகிச்சைக்காவது இந்திய அரசின் அனுமதி பெற்று இந்தியா வருவாரா நித்தியானந்தா என்று எதிர்பார்க்கப்படுகிறது.