மரண தண்டனை முன் இது அவசியம்: உச்ச நீதிமன்றம் அதிரடி!
25 May,2022
2011 ஆம் ஆண்டு மத்தியபிரதேசதில் திருட சென்ற திருடர்கள் அந்த வீட்டில் உள்ள மூன்று பெண்களை கொடூரமாக கொலை செய்துள்ளார்கள். அவர்களுக்கு மத்திய பிரதேசத்தின் உயர்நீதி மன்றம் மரண தண்டனையும் வழங்கியது. தொடர்ந்து மரண தண்டனைக் குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் விசாரித்தது.
அப்போது, பஞ்சாப் மாநிலத்தில் 1980-ல் பச்சன் சிங் வழக்கில் குற்றவாளியின் சூழ்நிலை (அதிக மன அழுத்தம் அல்லது உணர்ச்சிகளினால் குற்றத்தில் ஈடுபடுதல், மற்றொருவரின் தூண்டுதல் அல்லது துன்புறுத்தலினால் குற்றத்தில் ஈடுபடுதல்), குற்றம் சாட்டப்பட்டவரின் வயது, சம்பவத்தின் போது அவர்களின் மனநிலை ஆகியவற்றை ஆராய்ந்து அரிதான வழக்குகளுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும், இது பல்வேறு மரண தண்டனையை விவாதிக்கும் போது பெரும்பாலான நீதிமன்றங்களால் மேற்கோள் காட்டப்படுகிறது. அதன்படி சிறையில் அவர்களின் நன்னடத்தை மற்றும் அவர்கள் சமூகத்தை அச்சுறுத்துவர்களா என்று ஆராய்ந்தனர்.
மேல்முறையீட்டில், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமும் வழங்கிய தீர்ப்புகளுக்குப் பதிலாக குறைந்தபட்சம் 25 ஆண்டுகால சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. தொடர்ந்து உச்சநீதிமன்றம் மரணதண்டனை வழங்குவதற்கு முன் குற்றவாளிகளின் மனநிலை அறிக்கை மற்றும் நடத்தைகளை ஆராயவேண்டியது அவசியம் என்று உத்தரவிட்டுள்ளது.