நம்பர் 1 கோல்ஃப் வீராங்கனைக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம்
23 May,2022
இந்தியவின் நம்பர் 1 கோல்ஃப் வீராங்கனை அதீதி அசோக்கிற்கு பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் மோசமான அனுபவம் நிகழ்ந்து உள்ளது. பாரீஸ்: கடந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டியில், அதீதி அசோக், கோல்ஃப் போட்டியில் பங்கேற்றார். இறுதி நாள் வரை 3வது இடத்தில் இருந்த அதீதி, நூலிழையில் பதக்கத்தை தவறவிட்டார். எனினும் அவருக்காக அப்போது கோல்ஃப் விளையாட்டை கண்டு களித்தனர். இந்த நிலையில், அதீதி அசோக் கோல்ஃப் தொடரில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் பாரீஸ் விமான நிலையத்தில், அதீதி அசோக்கின் கோல்ஃப் ஸ்டிக்கள் அடங்கிய அவரது பை வரவில்லை. இது குறித்து விமான நிலையத்தில் அதிகாரிகளிடம் புகார் அளிக்க, விரைவில் ஓட்டலுக்கு வந்து சேர்த்துவிடுவதாக பதில் கிடைத்தது. ஆனால், இது வரையும் கோல்ஃப் பை வராததால், சமூக வலைத்தளத்தில் அதீதி புகார் அளித்துள்ளார். டுவிட்டரில் மேசஜ்க்கு பதில் கிடைக்கவில்லை. எனக்கு போட்டிகள் இருக்கின்றன. இதனால் நாளைக்குள் எனது கோல்ஃப் ஸ்டிக்களை பெற்று தாருங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் முன்னணி கோல்ஃப் வீராங்கனையான அதீதிக்கு அவரது உடைமைகளை பெற்று தாருங்கள் என்றும், இது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.