600 கிளைகளை மூடுகிறது சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா: அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
06 May,2022
நூறு ஆண்டு பழமையான சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாr600 கிளைகளை மூட இருப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி வாராக்கடன் காரணமாக நஷ்டம் அடைந்து வருவதாகவும் ரிசர்வ் வங்கி இந்த வங்கியை சீரமைக்கும் வகையில் 600 கிளைகளை மூட ஆலோசனை கூறியுள்ளதாகவும் தெரிகிறது
இதனை அடுத்து 2023ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 600 கிளைகளை மூடுவது அல்லது வேறு வங்கிகளுடன் ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தனது 600 கிளைகளை மூட இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்