பேரறிவாளினின் விடுதலை விவகாரம் : உச்சநீதிமன்றம் ஏன் தலையிடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி!
28 Apr,2022
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளினின் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏன் தலையிடக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பேரறிவாளனின் விடுதலை குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது விடுதலை குறித்து அமைச்சரவையின் முடிவுக்கு காத்திருக்காமல், ஆளுநர் தனிப்பட்ட முடிவு எடுக்க முடியாது எனவும், ஆளுநர் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல அதிகாரம் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டால், கூட்டாட்சி அமைப்புக்கு பாதகமானதாக அமையும் எனத் தெரிவித்த நீதிபதிகள், பேரறிவாளனின் விடுதலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏன் தலையிடக்கூடாது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.