மத்திய அரசின் இ-பாஸ்போர்ட்: என்ன ஸ்பெஷல்..? என்ன நன்மை..? யாருக்கெல்லாம் கிடைக்கும்..?!
18 Apr,2022
உலக நாடுகளில் பாஸ்போர்ட் என்பது பொதுவாகப் பேப்பர் வடிவத்தில் தான் உள்ளது, இதன் பாதுகாப்பு தன்மையை அதிகரிக்கப் பல புதுமைகளை ஒவ்வொரு நாட்டிலும் அறிமுகம் செய்யப்பட்டு வரும் நிலையில் இந்தியா இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த இ-பாஸ்போர்ட் விநியோகம் மூலம் பாதுகாப்பு தன்மையை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் போலி பாஸ்போர்ட்களை முழுமையாகத் தடுக்க முடியும்.
இ-பாஸ்போர்ட் என்றால்..? முழுக்க முழுக்க டிஜிட்டல் பாஸ்போர்ட் தான் இந்த இ-பாஸ்போர்ட்-ஆ..? இ-பாஸ்போர்ட் எப்படி இயங்கும்..?
மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி முரளீதரன் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், 2022-23 நிதியாண்டில் இந்திய அரசு, மக்களுக்கு இ-பாஸ்போர்ட் வழங்கும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதன் மூலம் புதிதாகப் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்பவர்கள், பாஸ்போர்ட் புதுப்பிப்போர் அனைவரும் இ-பாஸ்போர்ட் பெற வாய்ப்பு உள்ளது.
சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்
இந்த இ-பாஸ்போர்ட் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இருக்காது, ஆனால் பாஸ்போர்ட் உரிமையாளர் குறித்த தகவல்கள் நிறைந்த டேட்டா பக்கத்தில் இருக்கும் அனைத்துத் தரவுகளும் எலக்ட்ரானிக் சிப் பதவி செய்யப்பட்டு, பாஸ்போர்ட்டில் பொருத்தப்படும்.
சர்வதேச சிவில் ஏவியேஷன்
இத்தகைய சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட்-ஐ ஏற்க சர்வதேச சிவில் ஏவியேஷன் அமைப்பு (ICAO) ஆவணம் 9303 அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் இத்தகயை சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான தகவல்களையும் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
RFID தொழில்நுட்பம்
இந்தச் சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட் கிட்டதட்ட கிரெடிட் கார்டு, டெபிட் கார்டில் இருக்கும் சிப் போலவே இயங்கும். மேலும் சிப் பொருத்தப்பட்ட பாஸ்போர்ட் RFID தொழில்நுட்பம் மூலம் ஸ்கேன் செய்யப்பட்ட உடனே உரிய தகவல்களைப் பெற முடியும், இதேபோல் தகவல் சரிபார்ப்பும் இதன் மூலம் எளிதாகச் செய்யமுடியும்.
தேசிய தகவல் மையம்
இ-பாஸ்போர்ட் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் தொழில்நுட்பப் பொறுப்புகளைத் தேசிய தகவல் மையத்திடம் (NIC) வெளியுறவு அமைச்சகம் ஒப்படைத்துள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. இந்த இ-பாஸ்போர்ட் பல வகையில் பயன்படும்