தமிழகத்திற்குள் அகதிகளாக நுழையும் இலங்கை தமிழர்கள்: தனுஷ்கோடியில் தீவிர கண்காணிப்பு!
29 Mar,2022
இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக நுழைவதன் எதிரொலியாக இந்திய கடலோர காவல் படையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி, உணவு பொருட்களின் விலையேற்றம் மற்றும் அத்தியாவசிய மற்றும் உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக கடந்த வாரம் 16 இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி வழியாக அகதிகளாக தமிழகத்திற்குள் வந்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய காரணமாக இன்னும் பல இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக வரக்கூடும் என பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடலோர காவல்படையினர் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையில் இருந்து தனுஷ்கோடி வரை உல்ல 13 மணல் திட்டுகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள கடலோர காவல் படையினர் நடுக்கடலில் மீன்பிடிக்கும் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்களின் அடையாள அட்டை மற்றும் படகின் உரிமம் உள்ளிட்டவற்றை சோதனை செய்து வருகின்றர். கடலில் அன்னிய நபரிகளின் நடமாட்டம் தெரியவந்தால் உடனடியாக கடலோர காவல் படைக்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் மீனவர்களை அறிவுறுத்தி வருகின்றனர். இந்திய கடலோர காவல்படையின் இந்த தீவர கண்காணிப்பு காரணமாக தனுஷ்கோடி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.