மாறாக வாகன ஓட்டிகள் மேற்குறிப்பிட்ட 2 ஆவணங்களையும் எம்பரிவாஹன் (mParivahan) மொபைல் ஆப்பில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் மற்றும் தேவையான நேரங்களில் அல்லது போக்குவரத்து காவல் அதிகாரிகள் கோரும் இடங்களில் சமர்ப்பிக்கலாம்.
1989 மோட்டார் வாகனச் சட்டத் திருத்தத்தின் (Amendment to the 1989 Motor Vehicles Act) அடிப்படையில் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசன்ஸ்) அல்லது ஆர்சி (ரெஜிஸ்ட் ரேஷன் கார்டு) புக்கை வாகன ஓட்டிகள், எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக வாகன ஓட்டிகள் மேற்குறிப்பிட்ட 2 ஆவணங்களையும் எம்பரிவாஹன் (mParivahan) மொபைல் ஆப்பில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் மற்றும் தேவையான நேரங்களில் அல்லது போக்குவரத்து காவல் அதிகாரிகள் கோரும் இடங்களில் சமர்ப்பிக்கலாம்.
"எங்கள் ஊரில் உள்ள போக்குவரத்து காவல் அதிகாரிகள் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஒரிஜினல் டாக்குமெண்ட்ஸ் தான் வேண்டுமென்று கேட்பார்கள்" என்று நீங்கள் நினைக்கும் பட்சத்தில், எம்பரிவாஹன் ஆப் வழியாக காட்டப்படும் / சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் 100 சதவீதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பயனர்களுக்கு வசதியான ஒரு செயல்முறை என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.
எம்பரிவாஹன் ஆப்பில் (mParivahan App) உங்கள் ஓட்டுநர் உரிம விவரங்களை சேர்ப்பது எப்படி? இதோ அதற்கான எளிய மற்றும் படிப்படியான வழிமுறைகள்:
1. இதை செய்ய, முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து எம்பரிவாஹன் (mParivahan) ஆப்பை டவுன்லோட் செய்யவும்.
2. பிறகு எம்பரிவாஹன் ஆப்பை திறந்து, உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி ரிஜிஸ்டர் செய்யவும். இந்த செயல்முறையின் போது உங்களுக்கு ஒடிபி ஒன்று கிடைக்கும். அதை பயன்படுத்தி ரிஜிஸ்ட்ரேஷனை செய்து முடிக்கவும்.
3. இப்போது, உங்களுக்கு இரண்டு தேர்வுகள் அணுக கிடைக்கும் - டிஎல் (DL), அதாவது டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆர்சி (RC), அதாவது ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிக்கேட் (Registration Certificate)
4. டிஎல் விவரங்களை சேர்க்க உங்கள் டிஎல் நம்பரை உள்ளிடவும்.
5. பிறகு ஆப்பில் உங்களின் விர்ச்சுவல் டிஎல்-ஐ (virtual DL) உருவாக்க, "ஆட் டூ மை டாஷ்போர்ட்" (Add To My Dashboard) என்பதை கிளிக் செய்யவும்
6. பிறகு உங்கள் டேட் ஆப் பெர்த்-ஐ (DOB) உள்ளிடவும், இப்போது உங்கள் டிஎல் ஆப்பின் 'டாஷ்போர்டில்' சேர்க்கப்படும்.
இப்போது ஆப்பில் சேர்க்கப்பட்ட உங்கள் விர்ச்சுவல் டிரைவிங் லைசென்ஸ் பார்க்க, ஸ்க்ரீனின் மேற்புறத்தில் உள்ள டாஷ்போர்டு பட்டனை கிளிக் செய்யவும், அதை கிளிக் செய்தவுடன் உங்கள் டிஎல் பற்றிய முழு விவரங்களும், உடன் ஒரு க்யூஆர் கோடும் (QR Code) தோன்றும். அதை ஸ்கேன் செய்ய குறிப்பிட்ட ஆவணத்தின் அனைத்து தகவல்களும் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளுக்கு அணுக கிடைக்கும். டிஎல்-ஐ சேர்ப்பது போல ஒருவர் தன் வாகனத்தின் ஆர்சி புக் விவரங்களையும் இந்த ஆப்பில் சேமிக்கலாம்.
எம்பரிவாஹன் ஆப்பில், தனிநபருக்கு சொந்தமான அல்லது தனிநபர் பயன்படுத்தும் பல வாகனங்களை ஒருவர் சேர்க்கலாம். உதாரணமாக, உங்கள் மனைவியின் பெயரில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை நீங்கள் ஓட்டும் பட்சத்தில், குறிப்பிட்ட வாகனத்தின் ஆவணங்களை (ஒரு கணவராக) உங்கள் எம்பரிவாஹன் ஆப்பில் சேமித்து வைக்கலாம். இதேபோல், உங்களின் டிரைவிங் லைசன்ஸ் விவரங்களை ஒரே ஒரு ஸ்மார்ட்போனில் மட்டுமின்றி பல டிவைஸ்களிலும் சேர்க்கலாம்.இந்த ஆப் கூகுள் ப்ளே ஸ்டோரில் மட்டுமின்றி ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.