‘கைலாசா’ என்கிற சமூக வலைதளப் பக்கம் மூலம் நாள்தோறும் தனது பிரசங்கத்தை வீடியோ காட்சிகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் நித்யானந்தா.
உள்ளாட்சித் தேர்தல், உக்ரைன் போர் என்று பரபரப்புகளுக்கு மத்தியில் நித்யானந்தாவை நாம் மறந்தே போயிருந்தோம்.
அட்டகாச சிரிப்பும் அதிர்வெடி ஆங்கிலமுமாக நித்தி வெளியிடும் வீடியோக்களையும் கொஞ்ச நாள்களாகக் காணோம்.
இந்தச் சூழலில் சத்யூஜாஜா என்கிற அமெரிக்கர் பேசும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.
“ராஜசேகரன், நீ எத்தனை பேரை இதுவரை ஏமாத்தியிருக்க, இப்பவும் ஏமாத்திக்கிட்டு இருக்கே! நீ எங்க இருக்கன்னு யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுட்டிருக்கே.
நீ இருக்குற இடத்தை நாங்க கண்டுபிடிச்சுட்டோம். சீக்கிரமே நீ சிறைக்குப் போகப் போற” என்று, காவி உடையுடன் சாமியார் கெட்டப்பில் உள்ள அவர் அந்த வீடியோவில் பேசுகிறார். ‘ராஜசேகரன்’ என அவர் குறிப்பிடுவது நித்யானந்தாவைத்தா
vanuatu
கைலாசா’ என்கிற சமூக வலைதளப் பக்கம் மூலம் நாள்தோறும் தனது பிரசங்கத்தை வீடியோ காட்சிகளாகத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார் நித்யானந்தா.
இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியான அவருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு எது, அவர் எந்தத் தீவைக் கைலாசாவாக மாற்றியிருக்கிறார் என்று மத்திய அரசு ஒருபுறம் மண்டையைக் குடைந்துவந்தது.
இந்நிலையில்தான் நித்யானந்தாவின் முக்கிய சீடர்களில் ஒருவராக இருந்து, இப்போது நித்திக்கு எதிராகவே கம்பு சுற்ற ஆரம்பித்துள்ளார் சத்யூஜாஜா.
2018-ம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்ற நித்யானந்தா, ஆஸ்திரேலியா அருகில் ஒரு தீவை விலைக்கு வாங்கித் தனி நாடாக மாற்றும் முயற்சியில் அவர் இறங்கியிருப்பதாகச் சொல்லப்பட்டது.
இந்நிலையில்தான் ‘ஆஸ்திரேலியாவுக்கு அருகில் இருக்கும் வானாடூ தீவு அல்லது நியூ கலடோனியா தீவில் நித்யானந்தா தற்போது இருக்கிறார்’ என்று உறுதிபடச் சொல்லியிருக்கிறார்.
நித்தியைத் தொடர்ந்து கண்காணித்து வருபவர்கள் இதுகுறித்துக் கூடுதல் தகவல்களையும் சொல்கிறார்கள்.
“வானாடூ, (vanuatu)13 பெரிய தீவுகளும் ஏராளமான குட்டித் தீவுகளும் கொண்ட நாடு. இதன் அருகிலேயே இருக்கிறது நியூ கலடோனியா.
இது பிரெஞ்சு அரசுக்குச் சொந்தமான தீவுப்பகுதி. கலடோனியாவில் ஐந்து பெரிய தீவுகளும் ஏராளமான குட்டித் தீவுகளும் உள்ளன.
இந்தக் கடல் பகுதியில் உள்ள ஒரு தீவில் நித்யானந்தா தன் சீடர்கள் சிலருடன் இப்போது இருக்கிறார். அமெரிக்காவில் பதியப்பட்ட ஒரு இணையதள ஐ.டி மூலமே அவரது வீடியோக்கள் வெளியாகின்றன.
தற்போது நித்திக்குப் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பிவந்த பக்தர்கள் பலரும் இப்போது அவரிடமிருந்து விலகிவிட்டனர்.
வானாடூ நாட்டின் மூலம் தூதரக அந்தஸ்திலான பாஸ்போர்ட் பெற முயன்றார். இந்திய அரசு அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துவிட்டதால் அந்த பாஸ்போர்ட்டும் கிடைக்கவில்லை.
ஆண்டுதோறும் அவர் நடத்தும் 15 நாள்கள் ஆன்மிகப் பயிற்சி முகாம் மூலம் கோடிக்கணக்கில் பணம் வசூலாகும்.
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள் நின்றுபோயிருந்த பயிற்சி முகாமை இப்போது மீண்டும் ஆன்லைன் வழியாக ஆரம்பித்துள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு கலெக்ஷன் நடக்கவில்லை.
அமெரிக்கரான சத்யூஜாஜா, பல நாடுகளில் இருக்கும் நித்யானந்தா பக்தர்களை இணைத்து ஆசிரமத்துக்கு நிரந்தர வருவாய்க்கு ஏற்பாடு செய்தவர்.
இப்போது நித்யானந்தாவின் உண்மை முகம் தெரிந்துவிட்டதால், சத்யூஜாஜா அவரிடமிருந்து விலகி, நித்யானந்தாவால் பாதிக்கப்பட்டவர்களையெல்லாம் ஒன்றுதிரட்டிவருகிறார். விரைவில் நித்தி சம்பந்தப்பட்ட சில வீடியோக்களையும் இந்த டீம் வெளியிடவிருக்கிறது.
நித்யானந்தா கைலாசாவில் செட்டிலாகிவிட்டாலும், அவரின் சில சீடர்கள் இப்போதும் இந்தியாவில் உள்ள பிடதி ஆசிரமத்தில் தங்கியுள்ளனர்.
கடந்த பல மாதங்களாகவே அவர்களின் அடிப்படைச் செலவுகளுக்கான பணத்தைக்கூட நித்யானந்தா தரப்பு அனுப்பவில்லையாம்.
சமாளிக்க முடியாத நெருக்கடியில் உள்ள அவர்கள், “நித்யானந்தாவை நம்பி நிம்மதியை இழந்துவிட்டோம்’’ என்று புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.