நியூயார்க்: வரலாறு எழுதப்படும் போது இந்தியா தப்பான பக்கத்தில் இருக்கும் என்று அமெரிக்கா அரசு தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் அதிகாரபூர்வ அறிவிப்பில் அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ரஷ்யா உக்ரைன் போரில் இந்தியா இதுவரைக்கும் நேரடியாக எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. ரஷ்யாவிற்கு எதிராக ஐநா அவைகளில் கொண்டு வரப்பட்ட 6க்கும் மேற்பட்ட தீர்மானங்களை இதுவரை இந்தியா நிராகரித்து உள்ளது.
எதிலும் இந்தியா வாக்களிக்கவில்லை. அதே சமயம் இந்தியா கொஞ்சம் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டோடுதான் இருக்கிறது.
பதிலடி கொடுக்கும் ரஷ்யா! அமெரிக்க அதிபர் பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ மீது பொருளாதார தடைகள் அறிவிப்புபதிலடி கொடுக்கும் ரஷ்யா! அமெரிக்க அதிபர் பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ மீது பொருளாதார தடைகள் அறிவிப்பு
வரலாறு
வரலாறு
வரலாற்று ரீதியான நட்பு ஒரு காரணம். சர்வதேச மேடைகளில் ரஷ்யா இந்தியா பக்கமே நின்று இருக்கிறது. மாறாக உக்ரைன் காஷ்மீர் விவகாரம் தொடங்கி எதிலும் இந்தியா பக்கம் நிற்கவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன. ரஷ்யாவின் எண்ணெயை வாங்க மாட்டோம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
இந்தியா ரஷ்யா
இந்தியா ரஷ்யா
ஐரோப்பா நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் 300 பில்லியன் டாலர் வங்கிகளில் முடங்கி உள்ளது. இதை பயன்படுத்தி தற்போது ரஷ்யா இந்தியாவிற்கு தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வழங்க உள்ளது. சர்வதேச மேடைகளில் இந்தியாவின் நிலைப்பாடு காரணமாக ரஷ்யா இந்த உதவியை செய்ய முன் வந்துள்ளது.
எண்ணெய் வாங்கும்
எண்ணெய் வாங்கும்
இந்தியா சார்பாக இந்திய ஆயில் நிறுவனம் குறைந்த விலையில் இந்த கச்சா எண்ணெயை வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. அதோடு டாலருக்கு பதில் ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்கும் திட்டத்திலும் இந்தியா உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியாவின் நிலைப்பாடு காரணமாக, அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதிக்குமா என்று கேள்விகள் எழுந்தன.
தவறான நிலைப்பாடு
தவறான நிலைப்பாடு
அமெரிக்க ஊடகங்கள் சில இதை பற்றி கேள்விகளை எழுப்பிய நிலையில் வெள்ளை மாளிகை வெளிப்படையாக பதில் சொல்லி உள்ளது. வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் ப்சகி அளித்த பேட்டியில், இந்தியாவின் செயல்பாடு அமெரிக்கா விதிமுறைகளுக்கு எதிரானது கிடையாது. அமெரிக்கா போட்டு இருக்கும் பொருளாதார தடைகளுக்கு எதிரானது இது என்று சொல்ல முடியாது. இந்தியா விதிகளை மீறுவதாக நான் நினைக்கவில்லை.
வார்னிங்
வார்னிங்
ஆனால்.. ஆனால்.. இந்தியா இந்த போரில் எந்த பக்கம் நிற்கிறது என்று பார்க்க வேண்டும். இந்தியாவின் முடிவு அவர்களை வரலாற்றில் தவறான பக்கத்தில் நிற்க வைத்துவிடும். வரலாறு எழுதப்படும் போது இந்தியா தவறான பக்கத்தில் நின்றுவிடும். ரஷ்யாவை ஆதரிக்கிறீர்களா. அவர்களின் போரை ஆதரிக்கிறீர்களா... அல்லது உக்ரைன் பக்கம் நிற்கிறீர்களா என்பது இந்தியா முடிவு செய்ய வேண்டும் .
வரலாறு என்ன சொல்லும்
வரலாறு என்ன சொல்லும்
உலக நாடுகள் அமெரிக்கா ரஷ்யா மீது போட்டுள்ள தடையை மதிக்க வேண்டும். அதை பின்பற்ற வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.. எங்களின் கோரிக்கை, என்று குறிப்பிட்டு இருக்கிறார். கிட்டத்தட்ட இந்தியாவிற்கு ஒருவகையில் அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா மீது எந்த விதமான பொருளாதார தடையும் விதிக்க மாட்டோம் என்பதை மறைமுகமாக சொல்லி இருக்கும் வெள்ளை மாளிகை, அதே சமயம் இந்தியாவின் மெல்லிசான ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.