கொடைக்கானல் மச்சூர் வனப்பகுதியில் 3-ஆவது நாளாக கொளுந்துவிட்டு எரியும் காட்டுத் தீ !
14 Mar,2022
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதியில் மூன்றாவது நாளாக காட்டுத்தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது.
குறித்த காட்டுத்தீயால், சுமார் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான மரங்கள், அரியவகை மூலிகை செடிகள் தீயில் கருகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த்யு காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் முயற்சிக்கு செய்துவரும் அதேவேளை காற்றின் வேகம் காரணமாக தீ வேகமாக பரவிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காட்டுத்தீ காரணமாக தோகைவரை, மச்சூர் உள்ளிட்ட பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளிக்கிறன.