ஜெயலலிதா மரண விசாரணை : 2 வருடங்களின் பின் ஆறுமுகசாமி ஆணையம் மீண்டும் விசாரணைகளை ஆரம்பித்தது!
08 Mar,2022
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இரண்டாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்கும் முன் அவருக்கு தலைசுற்று, மயக்கம் இருந்ததாகவும், மற்றவர்களின் துணை இல்லாமல் நடக்கக்கூட சிரமப்பட்டதாகவும், பாபு மனோகர் என்ற மருத்துவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) விசாரணைகளை ஆரம்பித்திருந்த நிலையில், அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் 5 பேர் விசாரணைக்கு முன்னிலையாகியிருந்தனர்.
அவர்களிடம் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது நடந்தவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதன்போதே மேற்படி வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்புக்கு முதல் நாள் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தாகவும், சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, உடற்பயிற்சி மேற்கொள்ளுமாறும், ஓய்வெடுக்குமாறும் பரிந்துரைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறி ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்துவிட்டதாகவும் அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர் தெரிவித்துள்ளார்.