இந்தியாவின் கடன் வசதியின் கீழ் இலங்கைக்கு டீசல், பெட்ரோல்!
07 Mar,2022
இந்தியா வழங்கும் கடன் வசதியின் கீழ் எதிர்வரும் மார்ச் 15 ஆம் திகதி நாட்டுக்கு எரிபொருள் கிடைக்கும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
இலங்கைக்கு கச்சா எண்ணெயை பெற்றுக் கொள்வதற்கான உத்தரவை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.
அத்தோடு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் முழு கொள்ளளவில் இயங்கி வருவதாகவும் அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
மேலும் சுத்திகரிப்பு நோக்கங்களுக்காக நிலையங்களில் 208,000 மெட்ரிக் டொன் கச்சா எண்ணெய் இருப்பை வைத்திருக்க முடியும் என அமைச்சர் கூறினார்.
இதனை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கவனித்து வருவதாகவும், நுகர்வோர் மற்றும் மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவதில் சிக்கல் இருக்காது என்றும் அவர் உறுதியளித்தார்