மு.க.ஸ்டாலின் திட்டங்களை மட்டுமே அறிவிக்கிறார், ஆனால் செயல்படுத்தவில்லை, 5 சவரன் தங்க நகை கடன் தள்ளுபடி கிடப்பில் உள்ளது போல் மகளிர்க்கு வழங்கும் ஆயிரம் ரூபாய்க்கு தனிக்குழு அமைத்து எந்த தாய்மார்களுக்கு தரலாம் என பார்பார் என சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நகர் புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்அறிமுகம் மற்றும் பிரச்சார கூட்டம் இன்று சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று வேட்பாளர்களுக்கும்,கட்சி தேர்தல் பொறுப்பாளர்கள், நிர்வாகிகளுக்கும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த சீமான்,
காஞ்சிபுரம் மண்ணில் பிறந்த அண்ணாவின் பெயரைச் சொல்லி வாக்கு கேட்கும் இவர்கள், " சாராயம் விற்றுவரும் காசு குஷ்டநோய் உடனிருப்பவர்கள் கையில் இருந்து வரும் வெண்ணைக்கு சமம் " எனக் கூறிய அண்ணாவின் சொல்லுக்கு ஏற்ப அதே வேலையை தான் இக்கட்சிகள் செய்து வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒரே நாடு, ஒரே தேர்தல் என சொல்லி வருகிறார். ஒரே நாடு,ஒரே தேர்தல் என கொண்டு வருவதற்கு முன் ஒரே சுடுகாடு, ஒரே குளம் என கொண்டு வரவேண்டும்,
அண்ணா கூறியதைப் போல ஆட்டுக்கு ஏன் தாடி, நாட்டுக்கு ஏன் ஆளுநர், நாமென்ன வீட்டு பாடமா எழுதித் தருகிறோம், அவர் திருத்தி நமக்கு மார்க் போடுவதற்கு, ஆளுநரின் வேலை ஒற்றர் வேலை என குற்றச்சாட்டை முன்வைத்தார்,
மேலும் பேசுகையில்,
தற்போது நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மிரட்டப்படுவது அச்சுறுத்தல் படுவது தொடர்பாக அதிகம் பாதிக்கப்படுவது நாங்கள் தான், அதிமுக, பாமகவை விட அதிக அளவு பாதிக்கப்பட்டது நாங்கள்தான், 60 பேருக்கும் மேற்பட்டோர் மிரட்டப் பட்டுள்ளனர்.
சில இடங்களில் வேட்பாளர்களை மூன்று நாட்கள், நான்கு நாட்கள் கடத்தி வைத்திருந்திருக்கிறார்கள். இளம் வயது வேட்பாளர்களை கடத்தி இருக்கிறார்கள்.
சர்வாதிகாரம் என்று சொல்ல முடியாது இது கொடுங்கோன்மை. இப்படி செய்வதற்கு தேர்தலே வேண்டாம் நாங்கள் வென்று விட்டோம் என அறிவித்து விட்டு போய்விடலாம். தேர்தல் என்றால் முறைப்படி நடக்க வேண்டும், பேரம் பேசாமல் அச்சுறுத்தல் இல்லாமல் நடைபெற வேண்டுமென்றும்,
வார்டு உறுப்பினர்களாக நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் வந்தால் மேயர் பதவிக்கு யாருக்கும்வாக்களிக்க மாட்டார்கள், தனிப்பெரும்பான்மை பெற்றால் மட்டுமே மேயர் உள்ளிட்ட பதிவிகளை பெறுவோம்,
அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமென்றால் நாங்கள் கூட்டணி அமைத்து களம் காண்போம், தனித்து நிற்கவேண்டிய அவசியம் இல்லை, நாங்கள் தனித்து நிற்பதால் யாருக்கும் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என தெரிவித்தார்.
மேலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டங்களை மட்டுமே அறிவிக்கிறார், அதனை செயல்ப்படுத்தவில்லை, தற்போதுநகர்புற உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு தான் மக்களை கவருவதற்கு தேர்தல் வாக்குறுதியின் படிமகளிர்க்கு உரிமைத் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய்வழங்குப்படும் என நேற்றைய தினம் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5 சவரன் தங்க நகை கடன் தள்ளுபடி கிடப்பில் உள்ளது போல் மகளிர்க்கு வழங்கும் ஆயிரம் ரூபாய்க்கு தனிக்குழு அமைத்து எந்த தாய்மார்களுக்கு தரலாம் என பார்பார். இவ்வாறு வெறும் வெற்று திட்டங்களாக தான் திமுகவில்உள்ளது, இவர்கள் தொடர்ந்து 20 ஆண்டுகள்நாங்கள் தான் ஆட்சியில் இருப்போம் என சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
ஜெயலலிதாவை நிரந்தர முதல்வர் என சுவர் விளம்பரங்களில் எழுதிக் கொண்டிருந்தார்கள் ஆனால் இப்பொழுது அவர் எங்கே என கேள்வி எழுப்பி அரசியல்வாதிகள் இதை உணர வேண்டும் என தெரிவித்தார்.