. வாவா சுரேஷ் உயிர் பிழைத்தது எப்படி தெரியுமா?65 விஷ முறிவுகள்.
08 Feb,2022
வெறியில் இருந்த நல்ல பாம்பு.. உயிர் காத்த 65 விஷ முறிவுகள்.
கோட்டயம் அரசு மருத்துவமனையில் மனிதர் ஒருவருக்கு இத்தனை விஷ முறிவு மருந்து செலுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். தற்போது முழுமையாக தெறிவிட்டார். சாதாரணமாக எழுந்துநடமாட அவரால் முடிகிறது. தன்னை காப்பாற்றி மருத்துவர்களுக்கு வாவா சுரேஷ் நன்றி தெரிவித்தார். இனிமேல் பாதுகாப்பு உபகரணங்கள் உடன் பாம்புகளை பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
நல்ல பாம்பு கடித்து உயிருக்கு போராடிய வாவா சுரேஷிக்கு 65 விஷ முறிவு பயன்படுத்தப்பட்டதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.
கேரளாவை சேர்ந்த புகழ்பெற்ற பாம்பு பிடி மன்னன் வாவா சுரேஷ். இதுவரை 50,000-க்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ள இவர், ராஜ நாகங்களை பிடிப்பதில் வல்லவர். செங்கனாச்சேரி அருகே குறிச்சி எனும் பகுதியில் ஜனவரி 31ம் தேதி வீட்டில் நாகப்பாம்பு புகுந்ததாக வாவா சுரேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவகமாக பிடித்த அவர் அதனை சாக்குப் பைக்குள் நுழைக்க முயன்றார்.
அப்போது, எதிர்பாராத விதமாக சுரேஷின் வலது தொடையில் கடித்தது. சில மணிநேரங்களில் அங்கேயே மயக்கமான நிலைக்கு சென்றார். உடனே அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதித்தனர். முதலில் அவரது உடல்நிலை அபாயக்கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் தற்போது மீண்டு வந்துள்ளார்.
பொதுவாக நல்லபாம்பு விஷயத்தை அவ்வளவாக கடிப்பவர்கள் மீது செலுத்தாது. ஆனால், வாவா சுரேஷை கடும் கோபத்துடன் கடித்ததால் விஷம் அதிகளவு அவரது உடலில் செலுத்தியுள்ளது. இதனால், அவரது ரத்தத்தில் விஷம் நன்றாக கலந்துவிட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருக்கு தொடர்ந்து விஷ முறிவு மருத்து பாட்டில்கள் ஏற்றப்பட்டன. சாதாரணமாக 25 பாட்டில்கள் ஏற்றினாலே விஷம் முறிந்துவிடும். ஆனால், வாவா சுரேஷ் உடலில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால், தொடர்ந்து விஷ முறிவு மருத்து ஏற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. வாவா சுரேஷிக்கு 65 விஷ முறிவு மருத்து பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கோட்டயம் அரசு மருத்துவமனையில் மனிதர் ஒருவருக்கு இத்தனை விஷ முறிவு மருந்து செலுத்தப்பட்டது இதுவே முதல்முறையாகும். தற்போது முழுமையாக தெறிவிட்டார். சாதாரணமாக எழுந்துநடமாட அவரால் முடிகிறது. தன்னை காப்பாற்றி மருத்துவர்களுக்கு வாவா சுரேஷ் நன்றி தெரிவித்தார். இனிமேல் பாதுகாப்பு உபகரணங்கள் உடன் பாம்புகளை பிடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனை வாவா சுரேஷ் ஏற்றுக்கொண்டுள்ளார். இனிமேல் தகுந்த உபகரணங்களை கொண்டு பாம்பை கையாளப்போவதாக உறுதியளித்துள்ளார்.
தற்போது வாவா சுரேஷ் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளளார். வாவா சுரேஷ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது அவர்களது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 'தான் உயிருடன் இருக்கும்வரை பாம்புகளை பிடிப்பேன். மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவேன்' என வாவா சுரேஷ் தெரிவித்துள்ளார்.