வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட தயாரா?- சீமான் பேட்டி
08 Feb,2022
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் என்பது பேரம் பேச வாய்ப்பாக உள்ளது. இதனால் ஜனநாயகம் செத்து விடுகிறது. குடியரசு தலைவரையும் மக்களாகவே தேர்வு செய்யும் முறை கொண்டு வர வேண்டும்.
சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:-
3-வது பெரிய கட்சியான நாம் தமிழர் கட்சிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பில்லை. எங்களை கட்சியாகவே கருதாதபோது எங்கள் வேட்பாளரை கண்டு தி.மு.க. அஞ்சுவது ஏன்? நீட் தேர்வில் வென்றவர்களுக்கே படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை ஏன்?
பாஜக
நீட் தேர்வில் வென்றவர்களுக்கு தனியார் கல்லூரியில் பணம் வசூல் செய்யாமலா சீட் வழங்குகிறார்கள்? பா.ஜ.கவும், காங்கிரசும் வேறு வேறு கட்சியாக இருந்தாலும் அவைகளுக்கு கொள்கை ஒன்றுதான். இந்தியா என்பது 130 கோடி மக்களின் நாடு அல்ல. சில, பல முதலாளிகளின் வீடாக மாறிக்கொண்டிருக்கிறது.
பா.ஜ.க. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா? நாம் தமிழர் கட்சியை விட பா.ஜ.க. தனித்து நின்று ஒரு ஓட்டு அதிகமாக வாங்க முடியுமா? அப்படி வாங்கினால் அது பெரிய கட்சி என ஏற்றுக் கொள்கிறேன்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மறைமுக தேர்தல் என்பது பேரம் பேச வாய்ப்பாக உள்ளது. இதனால் ஜனநாயகம் செத்து விடுகிறது. குடியரசு தலைவரையும் மக்களாகவே தேர்வு செய்யும் முறை கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.