பட்ஜெட் 2022: பாதுகாப்பானதா 'இ - பாஸ்போர்ட்?'
02 Feb,2022
'வரும் நிதியாண்டில், 'இ - பாஸ்போர்ட்' எனப்படும் மின்னணு பாஸ்போர்ட் வழங்கப்படும்' என, மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பாதுகாப்பானதா என்பது குறித்து, வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது: இ - பாஸ்போர்ட் என்பது, வழக்கமான பாஸ்போர்டின் பின்பக்கத்தில், 64 'கிலோபைட்' அளவு தகவல்களை சேமிக்கக் கூடிய, 'சிப்' பொருத்தப்படும். இதில், பாஸ்போர்ட் வைத்திருப்பவர் குறித்த வழக்கமான தகவல்கள் அனைத்தும் இருக்கும். மேலும், கடைசி, 30 வெளிநாட்டு பயணம் தொடர்பான தகவல்களும் இருக்கும்.
இந்த 'சிப்'பில் மோசடி செய்ய முடியாது. போலியாக தயாரிக்க முடியாது. அதனால், போலி பாஸ்போர்ட் தயாரிப்பது ஒழிக்கப்படும். ஆள் மாறாட்டமும் செய்ய முடியாது. விமான நிலையங்களில் பாஸ்போர்ட் சரிபார்ப்பதற்காக காத்திருக்க வேண்டிய நேரம் வெகுவாக குறைந்துவிடும். இது முழுக்க முழுக்க பாதுகாப்பானது. சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு நிர்ணயித்துள்ள தரத்துக்கு இணையாக இது இருக்கும்.
இந்த பாஸ்போர்ட், மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள அரசு பாதுகாப்பு அச்சகத்தில் அச்சிடப்படும். பாஸ்போர்ட் வினியோகிப்பதை, டி.சி.எஸ்., நிறுவனம் மேற்கொண்டாலும், அரசு தான் வழங்கும். அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி என, 120க்கும் மேற்பட்ட நாடுகளில் இ - பாஸ்போர்ட் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறின