தூத்துக்குடி டூ பாளை ரோட்டில் அரசு பாலிடெக்னிக் அருகே மிகப் பெரிய 11 ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் மிகப் பெரிய அளவிலான ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மீண்டும் துவங்க உள்ளது.தூத்துக்குடி டூ பாளை ரோட்டில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்கும் பொருட்டு நான்குவழிச்சாலை அமைக்க மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதற்காக நெடுஞ்சாலைத்துறை மூலம் ரோடு அமைக்கும் பணிக்கு சுமார் 3 கோடி ரூபாயிற்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்தப் பணிக்காக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக முதல் கட்டமாக தூத்துக்குடியில் மிகப் பெரிய ஆக்கிரமிப்பு கட்டடமாக இருந்த ஈகிள் புக் சென்டர் உள்ளிட்ட பெரிய கட்டடங்கள் இடித்து பெரும் போலீஸ் பட்டாளத்தின் பாதுகாப்புடன் இடித்து தள்ளப்பட்டன. இதற்கான பணிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் நடந்தது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.இந்த கட்டடம் இடிக்கப்பட்டதை தொடர்ந்து இனிமேல் போக்குவரத்து நெருக்கடிக்காக எந்த ஒரு கட்டடத்தை இடிக்க மாவட்ட நிர்வாகம் தயங்காது என்றும், ஆக்கிரமிப்புகளை பொறுத்தமட்டில் யார் சொன்னாலும் அதனை தடுக்க முடியாது என்கிற பரவலான கருத்து வியாபாரிகள் மத்தியில் உருவானதாக கூறப்படுகிறது. இதனால் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தூத்துக்குடியில் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகளுக்கு பணி செய்வது எளிதான நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.தொடர்ந்து ஆக்கிரமிப்ப தூத்துக்குடியில் அகற்றப்பட்டாலும் அதனால் பிரச்னை, மோதல் என்கிற எந்த ஒரு சிறு பிரச்னை இல்லாமல் இதற்கான பணிகள் அமைதியாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. அரசின் இடத்தை ஆக்கிரமிப்பு செய்திருந்தால் இதுதான் நடக்கும் என்பது தூத்துக்குடியில் உள்ளவர்களுக்கு முழுமையாக தெரியும் நிலை ஏற்பட்டுவிட்டதால் இதற்கான பணிகள் எந்தவித தடங்கலும் இல்லாமல் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.இதற்கிடையில் அடுத்த கட்டமாக மிகப் பெரிய ஆக்கிரமிப்பு அகற்றும் மூன்றாம் கட்ட பணி இன்னும் ஒரிரு நாளில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மொத்தம் 410 சதுர மீட்டர், அதற்கு மேல் உள்ள மீட்டர் கொண்ட கடைகள், அதற்கு குறைவான மீட்டர் கொண்ட கடைகள் போன்ற ஆக்கிரமிப்பு கடைகளை இடித்து தள்ள வருவாய்துறை மற்றும் மாநகராட்சி மூலம் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக அரசு பாலிடெக்னிக்கிற்கு மேல் புறம், சிஎஸ்ஐ சர்ச் கீழ்புறம் உள்ள மிகப் பெரிய வர்த்தக நிறுவனம் மற்றும் 11 கடைகளுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு இடத்தை ஆக்கிரமித்து கட்டடம் கட்டியுள்ளீர்கள். நீங்களாக அந்த ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளுங்கள். இல்லை என்றால் அரசு மூலம் அந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி மேற்கொள்ளப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நோட்டீஸ் கொடுக்கப்பட்டு விட்டதால் அவர்களாக அந்த ஆக்கிரமிப்பு கடைகளில் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். இல்லை என்றால் ஜெ.சி.பி உதவியுடன் இதன் தொடர்ச்சியாக அந்த ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு அனைத்தும் இடித்து தள்ளப்படும் என்று வருவாய்துறை மற்றும் மாநகராட்சி துறைகளின் சார்பில் அதிரடி எச்சரிக்கை விடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பழைய பஸ் ஸ்டாண்டை எதிரே உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை எந்த முறையில் மேற்கொள்ளலாம் என்று தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆக்கிரமிப்பு கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்குவது குறித்தும் தீவிர டிஸ்கஸ் செய்யப்பட்டு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகு இந்த பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்படும் என்று வருவாய்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொளத்தூர் தொகுதி, அவ்வை நகர் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளை சென்னை மாநகராட்சி இடித்துவருகிறது. இதை எதிர்த்து, கடந்த ஐந்து நாள்களாகப் போராடிவருகின்றனர் அப்பகுதி மக்கள்.
முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதி, அவ்வை நகர் பகுதியில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்துவரும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் வீடுகளை சென்னை மாநகராட்சி இடித்துவருகிறது. இதை எதிர்த்து, கடந்த ஐந்து நாள்களாகப் போராடிவந்த அந்தப் பகுதி மக்களை காவல்துறையினர் கைதுசெய்திருக்கின்றனர்.
இடிக்கப்படும் வீடுகள்
இடிக்கப்படும் வீடுகள்
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகர் முதல் தெருவில் சுமார் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், சுமார் 150 குடும்பங்கள் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்துவருகின்றன. இந்தக் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குமாறு பல ஆண்டுகளாக மக்கள் கோரிவருகின்றனர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம், மேம்பாலப் பணிகளுக்காக அவ்வை நகரில் உள்ள சில வீடுகள், கடைகள் அகற்றப்படவிருக்கின்றன எனக் கூறி மாநகராட்சி அதிகாரிகள், மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். பேச்சுவார்த்தையின் முடிவில் பாலத்தின் அகலம் சுமார் 28 அடி என்றும், சர்வீஸ் ரோட்டுக்கான இடம் 15 முதல் 20 அடி தேவை என்ற கணக்கீட்டின்படி சாலையின் மையத்திலிருந்து இருபுறமும் `அளவுக் குறியீடு (Marking)’ செய்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் 10-ம் தேதியன்று சென்னை மாநகராட்சி 6-வது மண்டல அலுவலர், `நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து தங்கள் வீடு கட்டப்பட்டிருக்கிறது. மேலும், ஜி.கே.எம் காலனி மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளை இணைக்கும் மேம்பாலக் கட்டுமானப் பணியும் நடைபெற்றுவருகிறது. ஆகவே, தாங்கள் இக்கடிதம் கிடைக்கப்பெற்ற ஏழு நாள்களுக்குள் தங்களால் கட்டப்பட்டுள்ள வீட்டினை உடனடியாக அகற்றித் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. தவறும்பட்சத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 6-ன் மூலம் தங்களது வீடு உடனடியாக இடித்து அகற்றப்படும்!" என்ற இறுதி அறிவிப்பை அனைவரின் வீட்டிலும் ஒட்டிச் சென்றிருக்கின்றனர்.
மாநகராட்சி நோட்டீஸ்
மாநகராட்சி நோட்டீஸ்
ஆனால், அவகாசம் முடிவதற்கு முன்பாகவே 12-ம் தேதி, காவல்துறையினரின் பாதுகாப்புடன் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை பொக்லைன் இயந்திரங்களைக்கொண்டு இடித்துவிட்டதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்ட அவ்வை நகர் பகுதி மக்கள் அனைவரும் இரவும் பகலுமாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்திருக்கின்றனர்.
போராடிய கொளத்தூர் தொகுதி மக்கள்
போராடிய கொளத்தூர் தொகுதி மக்கள்
இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் ஏழுநாள் கெடு நேற்று 17-ம் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது. இதனால், இன்று 18-ம் தேதி காலை 5-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 50-க்கும் மேற்பட்ட மக்களை அந்தப் பகுதியிலிருந்து அகற்றும் விதமாக காவல்துறையினர் கைதுசெய்திருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். மேலும், எஞ்சியிருக்கும் வீடுகளை சென்னை மாநகராட்சியினர் தற்போது முழுமையாக இடித்து அப்புறப்படுத்திவருகின்றனர்.
இடிக்கப்பட்ட வீடுகள்
இடிக்கப்பட்ட வீடுகள்
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அப்பகுதி மக்கள், ``60 ஆண்டுகளாக இங்குதான் வசித்துவருகிறோம். இப்போது திடீரென வீடுகளை இடித்து, வெளியேற்றினால் நாங்கள் எங்கே செல்வோம்? மேம்பாலம் கட்டுவதற்காக இடத்தை எடுத்துக்கொண்டு, எஞ்சியிருக்கும் எங்கள் வீடுகள் இருக்கும் இடத்தை மட்டும் அப்படியே எங்களிடம் ஒப்படைக்கக் கோரிக் கேட்டோம். மாநகராட்சி அதிகாரிகளும் அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால், தற்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு என்று கூறி, எங்கள் வீடுகள் முழுவதையும் இடித்து தரைமட்டமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இடித்த வீடுகளுக்கு மானியமோ, நாங்கள் வாழ்வதற்கு மாற்று வாழ்விடமோ அரசு தரப்பில் கொடுக்க முடியாது எனச் சொல்லிவிட்டார்கள்! நாங்கள் இப்போது எங்கள் உடைமைகள், குழந்தைகளுடன் நடுத்தெருவில் நிற்கிறோம்" என்றனர்.
அ.ராஜ்
திருச்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பில் இருந்த வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் ஆகியவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையால் இடிக்கப்பட்டன.
திருச்சி -புதுக்கோட்டை சாலையில் குட்ஷெட் மேம்பாலம் இறக்கத்தில் உலகநாதபுரம் பகுதியில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட்டில் தஞ்சை பஸ் நிறுத்தம் வரை சாலையின் இடது புறம் ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள், வீடுகள் இருந்தன. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இந்த பகுதியில் வரிசையாக இருந்த காங்கிரீட் கட்டிடங்களில் ஓட்டல்கள், மாவுமில்கள், மருந்து கடைகள், மளிகை கடைகள், ஜெராக்ஸ் கடைகள் உள்பட பல பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
ஆக்கிரமிப்பு
கட்டிடங்கள் இருந்த இடம் தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மானவை என்றும், நெடுஞ் சாலைத்துறை இடத்தில் அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி இருப்பதாகவும் அதிகாரிகள் கூறி வந்தனர். இது தொடர்பாக கட்டிட உரிமையாளர்களுக்கும், நெடுஞ்சாலை துறைக்கும் கோர்ட்டில் நடந்து வந்த வழக்குகளில் நெடுஞ்சாலைத்துறையினருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கட்டிட உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நவம்பர் 12-ந்தேதி ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து தள்ளப்படும், அதற்கு முன்னதாக பொருட்களை எடுத்துக்கொள்ளுங்கள் என்று நோட்டீசு அனுப்பினர்.
இந்த நோட்டீசுகளை தொடர்ந்து இந்த கட்டிடங்களில் கடைகள் நடத்தி வந்த வியாபாரிகள் நேற்று முன்தினம் இரவே தங்களது பொருட்களை எடுத்து வேறு இடங்களுக்கு மாற்ற தொடங்கினர். இந்நிலையில் நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் ரவிக் குமார், உதவி பொறியாளர் செல்வ கணேஷ் உள்பட அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு வந்தனர்.
இடிக்கப்பட்டன
இதைத்தொடர்ந்து 3 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. இந்த கட்டிடங்களில் பல இரண்டடுக்கு மாடி கட்டிடங்களாக இருந்தன. அவற்றையும் எந்திரங்கள் இடித்து தள்ளின. ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்தவர்கள் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், டி.வி, கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களை தூக்கிக்கொண்டு வெளியே வந்தனர். அதன் பின்னர் அந்த வீடுகளும் இடிக்கப்பட்டன.
ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்தவர்கள், தங்களுக்கு கால அவகாசம் தரவேண்டும், மாற்று இடம் ஒதுக்கவேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் வசித்து வந்த உங்களுக்கு மாற்று இடம் தர முடியாது, அது எங்கள் வேலை அல்ல என்று பதில் அளித்தனர். இதனால் அவர்கள் என்ன செய்வதென தெரியாமல் தவித்தபடி நின்றனர்.
45 கட்டிடங்கள்
மொத்தம் 45 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டிட இடிப்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு கண்டோன்மெண்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் நிலைய அதிகாரி மெல்க்யூஸ் தலைமையில் தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திருந்தனர். துணை தாசில்தார் கன்னாமணி, நில அளவை துறை வட்ட துணை ஆய்வாளர் முத்துச்செல்வி உள்பட அதிகாரிகளும் ஆக்கிரமிப்பு கட்டிட இடிப்பு பணிகளுக்கு உதவியாக இருந்தனர்.
போக்குவரத்து நெருக்கடி
ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கும் பணியை தொடர்ந்து அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் குட்ஷெட் மேம்பாலம் இறக்கத்தில் இருந்து டி.வி.எஸ். டோல்கேட் வரை ஒரு வழிப்பாதையாக சாலையின் வலது புறத்தில் திருப்பி விடப்பட்டது. இதனால் கடும் போக்கு வரத்து நெருக்கடி ஏற்பட்டது.