புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் தமிழக போலீசார் கட்டுப்பாடு..புதுச்சேரி சார்பில் கட்டுப்பாடு இல்லை
09 Jan,2022
புதுச்சேரியில் முழு ஊரடங்கு போன்ற தீவிர கட்டுப்பாடுகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு காரணமாக தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரிக்குள் வரவில்லை.புதுச்சேரியில் இருந்தும் தமிழக பகுதிகளுக்கு புதுச்சேரி பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதுச்சேரியிலிருந்து தமிழக பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி- திண்டிவனம் சாலையில் உள்ள கோரிமேடு எல்லையில் தமிழக போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு போன்ற தீவிர கட்டுப்பாடுகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு காரணமாக தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரிக்குள் வரவில்லை.புதுச்சேரியில் இருந்தும் தமிழக பகுதிகளுக்கு புதுச்சேரி பேருந்துகள் இயக்கப்படவில்லை.இதனால் பேருந்து நிலையம்
ஊரடங்கை மீறி தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கு புதுச்சேரி எல்லையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் புதுச்சேரி அரசு சார்பில் எந்த கட்டுபாடும் இல்லை. இந்த சூழலில் புதுச்சேரி எல்லையில் வித்தியாசமான சூழல் நிலவுகிறது.