சீக்கியர் மீது தாக்குதல் அமெரிக்காவில் அதிர்ச்சி
09 Jan,2022
நியூயார்க் : அமெரிக்காவில் வாடகை கார் ஓட்டுனரான, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர் ஒருவர் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், வாடகை கார் ஓட்டுனரான சீக்கியரை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், அந்த ஓட்டுனர் தலையில் அணிந்திருந்த 'டர்பன்' எனும் தலைப்பாகையை அகற்ற, சில வெடி பொருட்களையும் அவர் மீது வீசியுள்ளார். இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியாகிஉள்ளது. இது இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.