அரசு பணியில் இல்லாதவர்களுக்கு, குறிப்பாக தனியார் துறையை சார்ந்த ப்ளூ காலர் ஊழியர்களும், தங்களது ஓய்வுகாலத்தை பற்றி கவலையே வேண்டாம்.
மத்திய அரசின் ஓய்வூதியம் திட்டம் உங்களுக்கு ஓய்வுகாலத்தினை நிம்மதியாக கழிக்க வழி செய்யும், அதுவும் தினசரி வெறும் 7 ரூபாய் நீங்கள் அதற்காக சேமித்தால் போதுமானது.
தங்கம் வாங்க சூப்பர் சான்ஸ்.. எவ்வளவு விலை குறைந்திருக்கு பாருங்க..!
அரசின் இந்த திட்டமானது தனியார் ஊழியர்கள் மத்தியில் மிக பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம். அதெல்லாம் சரி, அப்படி என்ன திட்டம் அது? இதில் யாரெல்லாம் இணையலாம்? வெறும் 7 ரூபாய் மூலம் 60,000 ரூபாய் ஓய்வூதியம் எப்படி சாத்தியம் வாருங்கள் பார்க்கலாம்.
இன்று நாம் பார்க்கவிருக்கும் திட்டம் அடல் பென்சன் யோஜா தான். இந்த திட்டத்தின் கீழ், 18 - 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கிக்கிளை அல்லது அஞ்சலகத்தில் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம். ஒரு வேளை சந்தாதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
தினசரி ரூ.7 முதலீடு? 18 வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் இணைகிறீர்கள் எனில். தினசரி 7 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள். மாதம் 210 ரூபாய் முதலீடு செய்வீர்கள். பணம் செலுத்த வேண்டிய வருடம் 42 வருடங்களாகும். இதன் மூலம் உங்கள் 61 வயதில் இருந்து மாதம் தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவீர்கள். வருடத்திற்கு 60,000 ரூபாய் ஓய்வூதியமாக பெறலாம்.
இதே மாதம் 42 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாயும், மாதம் 84 ரூபாய் செலுத்தினால் 2,000 ரூபாயும், மாதம் 126 ரூபாய் செலுத்தினால் மாதம் 3000 ரூபாயும், மாதம் 168 ரூபாய் செலுத்தினால், மாதம் 4,000 ரூபாயும் உங்களுக்கு ஓய்வூதியமாக கிடைக்கும்.
எனினும் இந்த திட்டத்தினை பொறுத்தவரையில் இளம் வயதிலேயே முதலீடு செய்ய தொடங்க வேண்டும். ஒரு வேளை 30 வயதில் முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் எனில், ? 30 வயது எனும்போது நீங்கள் 30 வருடம் பணம் செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் 116 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாய் பென்ஷன் பெறலாம். இதே மாதம் 5000 ரூபாய் பெற 577 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதே 40 வயது எனில் 1,454 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அப்போது தான் உங்கள் 60 வயதுக்கு பிறகு, இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
ஆக நீங்கள் பெற நினைக்கும் ஓய்வூதியத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் எப்போது முதல் முறையாக இணைகிறீர்களோ? அதே தேதியில் அடுத்தடுத்த மாதங்களில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். இதனை மாத மாதம் ஆட்டோடெபிட் முறையில் கூட டெபாசிட் செய்து கொள்ளலாம்.