நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு முடிவு!
23 Dec,2021
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் நளினியின் தாயார் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் "கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தனக்கு உடல்நிலை சரி இல்லை. அதனால் தமிழக அரசிடம் தனது மகளுக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன்.
இந்த கோரிக்கை மீது எந்த பதிலும் அளிக்காமல் தமிழக அரசு மௌனம் காத்து வருகிறது அதனால் தனது மகளுக்கு ஒரு மாதம் பரோல் வழங்க கோரி தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டு கொள்கிறேன் " என அந்த மனுவில் தெரிவித்து இருந்தார்.