தமிழகத்தில் இன்று 613 பேருக்கு கொரோனா பாதிப்பு, 9 பேர் உயிரிழப்பு
19 Dec,2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று 613 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 101 பேருக்கும், ஈரோட்டு, செங்கல்பட்டில் தலா 46 பேருக்கும், திருப்பூரில் 44 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 39 பேருக்கும், சேலத்தில் 36 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 39 ஆயிரத்து 196 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரே நாளில் 665 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 95 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்று ஒரே நாளில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 36,676 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 7,346 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்றை கண்டறிவதற்காக கடந்த 24 மணி நேரத்தில் 1,00,175 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன