மூடநம்பிக்கையால் 6 மாத பெண் குழந்தையை நரபலி கொடுத்த இஸ்லாமிய குடும்பம்!
19 Dec,2021
தஞ்சாவூர் அருகே 6 மாத பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக மூட நம்பிக்கையால் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொலை வழக்கில், அந்த பெண் குழந்தையின் தாத்தா, பாட்டி, மந்திரவாதி ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த மல்லிப்பட்டினத்தில் சேர்ந்த நசுருதீன்- சாலிகா தம்பதியினருக்கு காஜா ராய் என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக கூறிய பெற்றோர், காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்காமல், அந்த ஆறு மாத பெண் குழந்தையை அடக்கம் செய்து உள்ளனர்.
இது குறித்து காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைக்கவே, உடனடியாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே போலீசாரின் விசரணையில், நஸ்ருதீன் சித்தப்பா அசாருதீனுக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், ரத்தமின்றி நரபலி கொடுத்தால் நல்லது நடக்கும் என்று முகமது சலீம் என்ற மந்திரவாதி அறிவுறுத்தியுள்ளான்.
அதன் பெயரில் அந்த ஆறு மாத பெண் குழந்தையை அசாருதீன் மனைவி ஷர்மிளா பேகம் தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அசாருதீன், ஷர்மிளா பேகம், மந்திரவாதி முகமது சலீம் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.