முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கும் பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என பாகுபாடு இல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
விபத்தில் இனி ஒரு மரணமும் இல்லை என்ற நிலை வரட்டும்- மு.க.ஸ்டாலின்
விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
விபத்தில் சிக்குபவர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஏற்றி வைத்துள்ளார்.
இன்னுயிர் காப்போம். நம்மை காக்கும் 48 என்ற புதிய திட்டத்தை மேல்மருவத்தூரில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். உயிர் காக்கும் இந்த உன்னதமான திட்டம் இனி சாலை பயணத்துக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
சாலை பயணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் ஒவ்வொருவரும் பயணிக்கிறார்கள்.
ஆனால் எதிர்பாராத வகையில் விபத்துகளையும் சந்திக்க நேரிடுகிறது. எத்தனையோ இன்னுயிர்கள் இதில் பறிபோகின்றன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவிலேயே சாலை விபத்துகளில் தமிழகம் தான் முதலிடத்தில் இருந்தது. 2019 முதல் மொத்த சாலை விபத்துகளில் இறப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
ஒரு லட்சம் மக்கள் தொகையில் சாலை விபத்துகளின் இறப்பு விகிதம் 23.9 என்றிருப்பது குறைக்கப்பட வேண்டும் எனவும், சாலைப் பயணங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக அமைந்திடும் வகையிலும், சாலையில் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும், விபத்துக்களைத் தவிர்ப்பதற்குமான நடவடிக்கைகளை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.
அதன்படி அவர் உருவாக்கியதுதான் இந்த இன்னுயிர் காப்போம்! நம்மைகாக்கும் 48! என்ற திட்டம்.
பொதுவாக சாலைகளில் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை உடனடியாக மீட்டு, தொடர்ந்து 48 மணி நேரத்துக்குள் அவசர சிகிச்சைகளை மேற் கொண்டால் உயிர்கள் பறிபோவதை தவிர்க்க முடியும். இதைத்தான் இந்த திட்டத்தின் மூலம் தமிழக அரசு செயல்படுத்துகிறது.
விபத்துகளில் சிக்குபவர்களை மீட்டாலும் எந்த ஆஸ்பத்திரியில் சேர்ப்பது என்ற சிக்கல் வரும். அதை தவிர்க்க சாலை யோரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கும் பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என பாகுபாடு இல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
விபத்தில் சிக்குபவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளில் சேர்ப்பதற்கு பலர் தயங்குவார்கள். அந்த தயக்கத்தை போக்கி அவர்களை ஊக்குவிக்க விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்ப்பவர்களுக்கு உடனடியாக ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்படும்.
ஆஸ்பத்திரிகளில் சேர்த்த பிறகு அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகளுக்கான அரசு ரூ.1 லட்சம் வழங்கும்.
அதன் பிறகு முதல்- அமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் தொடர் சிகிச்சை பெற முடியும்.
இனி விபத்துகளில் இல்லை ஒரு சாவும் என்ற நிலையை நோக்கி தமிழகம் பயணிக்க தொடங்கி இருக் கிறது.