கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் உறுதி
09 Dec,2021
செய்யப்பட்டு உள்ளது.
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் குட்டனாடு பகுதியில் தக்கழி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில், பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து 10வது வார்டு கட்டுப்படுத்தப்பட்ட மண்டலம் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பிற பகுதிகளுக்கு பறவை காய்ச்சல் பரவி விடாமல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கலெக்டர் தலைமையிலான அவசரகால கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.