வெளிநாடுகளில் இருந்து வந்த 295 பேரில் , 100 பேர் ‛எஸ்கேப்'
07 Dec,2021
மஹாராஷ்டிராவில் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு வந்த வெளிநாடுகளில் இருந்து வந்த 295 பேரில் 100 பேர் மாயமாகி உள்ளனர்.
தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த கோவிட் வைரசான ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால், இதுவரை இந்தியாவில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிராவில் மட்டும் 10 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து மஹாராஷ்டிராவில் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் - டோம்ப்விலி மாநகராட்சி பகுதிகளுக்குள் வந்த வெளிநாட்டில் இருந்து 295 பேரில் 100 பேரை காணவில்லை என அந்த மாநகராட் மேயர் விஜய் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அவர்கள் அளித்த மொபைல் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. முகவரியில் உள்ள வீடுகள் பூட்டப்பட்டு கிடக்கின்றன. அச்சுறுத்தல் மிக்க நாடுகளில் இருந்து வருபவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும். 8 வது நாளில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதன் முடிவுகள் நெகட்டிவ் என வந்தாலும், அடுத்த 7 நாட்களுக்கு மீண்டும் தனிமைபடுத்தி கொள்வது கட்டாயம். அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றப்படுவதை அனைவரும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு மேயர் தெரிவித்தார்