டெல்லியிலிருந்து அமெரிக்க புறப்பட்ட விமானத்தில் ஒருவர் பலி..
05 Dec,2021
தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குப் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பரவல் தொடங்கிய உடனேயே கடந்த ஆண்டு விமானச் சேவைகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டன. அதன் பிறகு கடந்த மே மாதம் உள்நாட்டு விமானச் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.
சர்வதேச விமான போக்குவரத்து உலகின் பல்வேறு நாடுகளைப் போலவே இந்தியாவும் தடை விதித்துள்ளது. இந்த தடை சுமார் ஒரு ஆண்டுக்கு மேலாக அமலில் உள்ளது. அதிமுக உட்கட்சி தேர்தல்.. 'திடீரென உள்ளே புகுந்த சமூக விரோதிகள்..'
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் வைரஸ் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து டிச. 15ஆம் தேதி முதல் சர்வதேச விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதாக வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. இரு நாடுகளுக்கு இடையே விமானங்கள் இந்தியாவில் சர்வதேச
களுக்கு மட்டுமே தடை வித்துள்ளது. அதேநேரம் சில குறிப்பிட்ட நாடுகள், தங்களுக்கு விமானச் சேவையைத் தொடங்கியுள்ளன. பொதுவாக கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இரு நாடுகளுக்கு இடையே தான் இந் ஒப்பந்தம் போடப்படும். அதன்படி அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இந்த ஒப்பந்தம் போடப்பட்டு விமானங்கள் இயங்கப்படுகின்றன. ஏர் இந்தியா விமானம் இந்தச் சூழலில் தலைநகர் டெல்லியில் இருந்து இன்று காலை வழக்கம் போல ஏர் இந்தியா விமானம் ஒன்று அமெரிக்காவின் நியூயார்க்
(Newark) நகருக்குப் புறப்பட்டது. இருப்பினும், ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு வெறும் 3 மணி நேரத்தில் திடீரென அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு மருத்துவ உதவி தேவைப்பட, அந்த விமானம் மீண்டும் டெல்லி திரும்பியதாக ஏர் இந்தியா அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து உடனடியாக டெல்லி விமான நிலைய மருத்துவக் குழு விமானத்திற்குச் சென்றது. உயிரிழந்த பயணி அந்த பயணியைப் பரிசோதனை செய்த மருத்துவக் குழு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்தனர்.
அவர் உடல்நலக்குறைவாலேயே உயிரிழந்தாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிரிழந்த அந்த ஆண் பயணி அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் என்றும் அவர் தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து உயிரிழந்த பயணியின் உடலை அமெரிக்கா எடுத்துச் செல்ல தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய குழு மூலம் மாலை மீண்டும் விமானம் அமெரிக்கா புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது