கோவையில் நேற்று (டிச.,04) பெய்த கனமழைக்கு மூன்று கார்கள், பஸ் சிக்கியது; அவற்றில் பயணித்தவர்கள், உடனடியாக, வாகனங்களில் இருந்து கீழிறங்கி, உயிர் தப்பினர்.கோவையில் நேற்று மதியம், 2:30 மணிக்கு மழை துவங்கியது; 3:00க்கு மழை தீவிரமடைந்தது.
நகரின் அனைத்து பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டியது; மழை நீர் வடிகால் துார்வாராமல் இருந்ததால், நகரின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது.வாகனங்கள் ஆங்காங்கே ஸ்தம்பித்தன; போக்குவரத்து பாதிக்கப்பட்டது.லங்கா கார்னர், அவிநாசி ரோடு பாலம், கிக்கானி பள்ளி பாலம், சோமசுந்தரா பாலம், வடகோவை மேம்பாலங்களுக்கு கீழுள்ள சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. மழை நீர் வடிகால்களை சரிவர துார்வாராத காரணத்தால், ரோடுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதும் சர்வ சாதாரணமாகி விட்டது.
இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டிய, மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சுணக்கம் காட்டி வருவதால், மழை பெய்யும்போது, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. அவிநாசி ரோடு பாலத்தில் தண்ணீர் தேங்கியதால், அவிநாசி ரோடு, கூட்ஸ் ஷெட் ரோடு, மில் ரோடு, ப்ரூக் பீல்ட்ஸ் ரோடுகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவிநாசி ரோட்டில், அண்ணாதுரை சிலை சந்திப்பில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. காந்திபுரம் வந்தடைந்து, கிராஸ்கட் ரோடு வழியாக, ஆர்.எஸ்.புரம் செல்ல முயன்றனர்.
வடகோவை மேம்பாலத்திலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால், 2 கி.மீ., துாரத்துக்கு வாகனங்கள் தேங்கின.நீரில் மூழ்கிய கார்கள்n கிக்கானி பள்ளி அருகே உள்ள ரயில்வே கீழ்மட்ட பாலத்தில் மழையால் அதிகளவு நீர் தேங்கியது; அவ்வழியாக செல்ல முயன்ற கார் மூழ்கியது.n அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வழக்கம் போல் தண்ணீர் தேங்கியது. இதில் சிக்கிய கார் மிதந்தது; காரில் வந்த மூவர் மீட்கப்பட்டனர்.n சாய்பாபா கோவில் அருகே சிவானந்தா காலனி செல்லும் ரோட்டில் மழை வெள்ளத்தில் ஒரு கார் சிக்கியது. மழை வெள்ளத்தில் சிக்கிய கார், அவற்றில் பயணித்தவர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திர மாக மீட்டனர்.n லங்கா கார்னர் பகுதியிலும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
சவுரிபாளையம் - கரும்பு ஆராய்ச்சி மையத்துக்கு சென்ற, 22ம் நம்பர் தனியார் பஸ் 'பிரேக் டவுன்' ஆகி வெள்ளத்தில் மூழ்கியது. தண்ணீரில் பஸ் மூழ்கத் துவங்கியதும், பயணிகள் இறங்கி விட்டனர். ஒரு குழந்தை, பெண் உட்பட மூவர் பஸ்சுக்குள் சிக்கினர். தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், அவர்களை மீட்டனர். நீரில் மூழ்கிய பஸ்ஸை பொக்லைன் உதவியுடன் மீட்டனர்.மூழ்கிய பெட்ரோல் பங்க்n காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டில், மழைநீர் தேங்கியதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
n சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டில் மழை வெள்ளம் சூழ்ந்து பஸ்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.n மழை வெள்ளத்தால் சிங்காநல்லுார் பகுதி முழுவதும் வெள்ளக்காடானது.n ஒண்டிபுதுார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மழைநீரில் மூழ்கியது.n திருச்சி ரோட்டில் தேங்கிய தண்ணீரில் பானிபூரி கடைகள், சிறிய அளவிலான கடைகள் அடித்துச் செல்லப்பட்டன. அதிகளவு நீர் தேங்கியதால், சிங்காநல்லுார் - திருச்சி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.n ரோட்டின் நடுவில் வைக்கப்பட்டிருந்த டிவைடர்கள் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டன.n கோவை - அவிநாசி ரோட்டில் அதிகளவு மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்
.n அரசு மருத்துவமனை பகுதியில் தேங்கிய மழை நீரால் நோயாளிகள், உறவினர்கள் அவதிக்குள்ளாகினர். மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.n சத்தி ரோடு, லட்சுமி மில்ஸ், ஹோப்காலேஜ், சிட்ரா உள்ளிட்ட பகுதிகளில், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.'குளுகுளு' அறையில் அமர்ந்து, கோடிக்கணக்கில் பணம் செலவழிக்க மதிப்பீடு தயாரித்து, திட்டங்கள் தயாரிக்கும் அரசுத்துறை அதிகாரிகளே, இனியாவது மனசாட்சியோடு செயல்படுங்கள்.